விஜய் இயக்கத்தில் ,அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் ஜி. வி .பிரகாஷ் குமார் , சம்யுக்தாஹெக்டே, ராஜ் அர்ஜுன் ,யோகி பாபு ,சுமன், முனிஸ்காந்த்.உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் “வாட்ச்மேன்”

நாயகன் ஜி.வி.பிரகாஷ், ஸ்டன்ட் சில்வாவிடம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார். மறுபுறம் ஜி.வி.பிரகாஷ், சம்யுக்‌தா ஹெக்டே இருவரும் காதலிக்கிறார்கள். நாயகியின் பிடிவாதத்தால், சம்யுக்தாவை ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.

அடுத்தநாள் நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் நிலையில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிடுவதாக கடன் கொடுத்த ஸ்டன்ட் சில்வா மிரட்டுகிறார்.

இதையடுத்து வேறு வழி தெரியாமல் பங்களா ஒன்றில் திருட செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு ஒரு நாயிடம் மாட்டிக் கொள்கிறார். நாய் அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுக்கிறது. அதேநேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான சுமனை கொல்வதற்காக 5 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் ஒன்று அந்த வீட்டிற்கு வருகிறது.

கடைசியில், அந்த வீட்டில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா? அவருக்கு தேவையான பணம் கிடைத்ததா? அவரது நிச்சயதார்த்தம் நடந்ததா? சுமனை கொல்ல வந்தவர்கள் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே வாட்ச்மேனின் மீதிக்கதை.

ஜி.வி.பிரகாஷ் தன்னை எந்த வேடத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என இப்படத்திலும் காண்பித்திருக்கிறார். அதே வேளையில் இந்த படத்திற்கு அவர் தான் இசை. ஒரு திரில்லர் படத்திற்கு கான ஃபீல் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள ‘புரூனோ’ நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.

படத்தின் பெரிய பலமே டெக்னிக்கல் பணிகள் தான். சினிமாட்டோகிராபி மற்றும் இசை படத்தின் ரசிக்க வைக்க உதவுகிறது. நாயின் நடிப்பு படத்திற்கு மற்றொரு ஹைலைட்டாக விளங்குகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளன.

நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை சம்யுக்தா ஹெக்டே
இயக்குனர் ஏ.எல். விஜய்
இசை ஜி.வி.பிரகாஷ் குமார்
ஓளிப்பதிவு நிரவ் ஷா – சரவணன் ராமசாமி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.