X Videos Tamil Movie Team Press Meet

Color Shadows Entertainment X Videos Tamil Movie Press Meet Event held At RKV Studio,chennai. 12th Oct 2017.Ajayraj. Ahiruti Singh,Akshaya, Director & Producer Sajo Sundar and other grace the evevt. Pro – John.

பெண்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் விழிப்புணர்வு படம் தான் ‘X வீடியோஸ்’..!

“உங்கள் அந்தரங்கம் இணையதளத்தில் வெளியாவது இப்படித்தான்” ; X வீடியோஸ் இயக்குனர் அதிர்ச்சி தகவல்..!

“ஆபாச வீடியோக்கள் வைத்திருப்பவரா நீங்கள்…? ; எச்சரிக்கிறார் X வீடியோஸ் பட இயக்குனர்..!

“இலவசமாக டவுன்லோடு செய்வது ஆப் இல்லை.. உங்களுக்கான ஆப்பு” ; பகீர் கிளப்பும் ‘X வீடியோஸ்’..!

நண்பனின் மனைவிக்கு நேர்ந்த அவலத்தால் X வீடியோஸ்’ படத்தை உருவாக்கிய சஜோ சுந்தர்..!

கிளுகிளுப்பான படம் எடுத்துள்ளாரா இயக்குனர் ஹரியின் சீடர்..?

‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்..

“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமொஓக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.

என் பையன் கூட, “எங்க அப்பா டைரக்டர்.. இப்படி X வீடியோஸ் என்ற படம் எடுத்திருக்கிறார் என்று தன்னுடைய பிரண்ட்ஸிடம் கூட சொல்லமாட்டேன் என சொல்லிவிட்டான். ஏன் இந்த டைட்டிலை வைத்தீர்கள்.. எப்படி நாங்கள் இதை வெளியில் சொல்வது என என என் நண்பர்கள், படத்தில் வேலை பார்த்தவர்கள் பலரும் கேட்டார்கள். நிச்சயம் நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்.. இது இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம்..  குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது..

சரி இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏன் ஏற்பட்டது..? மொபைலில் ஆபாசப்படங்களை ரெகுலராக பார்க்கும் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரது மனைவியின் படமே ஒருநாள் இதுபோன்ற இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததை பார்த்து அதிர்ந்தேன்.. அவருக்கே தெரியாமல் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ எப்படி இணையதளத்துக்குள் வந்தது..? யாரால் படம்பிடிக்கப்பட்டது என்கிற ஆராய்ச்சியில் இறங்கியபோது பல அதிர்ச்சி கலந்த உண்மைகள் தெரியவந்தது..

நாம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாக சில ஆப்ஸ்கள் டவுன்லோடு செய்கிறோமே..? எப்படி அவன் நமக்கு இலவசமாக தருகிறான்.. அதனால் அவனுக்கு என்ன பிரயோஜனம்..? விஷயம் இருக்கிறது.. நாம் டவுன்லோடு செய்யும் பல ஆப்ஸ்’கள் இந்தக் ஆபாச இணையதளங்களுடன் கூட்டணியில் இருப்பவை தான். அதனால் அந்த ஆப்ஸ்’களை டவுன்லோடு செய்துவிட்டால் நம் மொபைலில் உள்ள நமது அந்தரங்க வீடியோக்கள் ஏதாவது இருப்பின், அவற்றை கண்டுபிடித்து இந்த ஆபாச இணையதளங்களுக்கு அவை அனுப்பி விடுகின்றன.

இதற்காக அந்த ஆபாச இணையதளங்கள் இந்த ‘ஆப்ஸ்’களுக்கு பணம் கொடுக்கின்றன. இன்றைய இணையதள உலகமே முக்கால்வாசி இந்த ஆபாச இணையதளங்கள் கொடுக்கும் பணத்தில் தான் இயங்கி வருகின்றன என்பது இன்னொரு அதிர்ச்சி கலந்த உண்மை.

அவ்வளவு ஏன்.. எங்கேயோ இருந்துகொண்டு உங்கள் மொபைலின் கேமராவை ஆபரேட் பண்ணும் அளவுக்கு டெக்னிகலாக இந்த கும்பல் வளர்ந்துவிட்டார்கள். தயவுசெய்து செல்போனை உங்க பெட்ரூமில் வைக்காதீர்கள். பாத்ரூமிற்குள் கொண்டுபோகாதீர்கள். நெருங்கியவர்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோவாக எடுக்காதீர்கள்.

இந்த ஆபாச வீடியோக்களுக்கு பிறப்பு மட்டும் தான் உண்டு.. இறப்பு என்பதே இல்லை.. அதனால் இந்த ஆபாச இணையதளங்களை கட்டுப்படுத்துவது மற்றும் தடைசெய்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தப்படத்தை எடுத்துள்ளேன்..

விரைவில் இந்த ஆபாச இணையதளங்களை தடை செய்யச்சொல்லி வழக்கு தொடுக்கவும் இருக்கிறேன்.. இந்த ஆபாச இணையதளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.. தெரியாத அப்பாவி ஜனங்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டுசெல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளேன்.

சமீபத்தில் அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதியின்றி மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு, அதனால் பல இன்னல்களுக்கும் உடல்நல குறைவுக்கும் ஆளாவதை பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேர்ந்தபோது, மிகவும் வேதனைப்பட்டேன்.. இந்தப்படத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் என்னால் இயன்ற அளவு அரசுபள்ளிகளில் கழிப்பறை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளேன்”.

இவ்வாறு கூறியுள்ளார் சஜோ சுந்தர்.

“எக்ஸ் வீடியோஸ்” படத்தின் மூலம் வரும் லாபத்தில் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்ட இயக்குநர் சஜோ சுந்தர் திட்டம்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘. 

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் சஜோசுந்தர் பேசும் போது ,

” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான்  எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து   எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது . என் நண்பர் ஒருவர் எனக்கு  , தான் பார்த்த பல விதமான வீடியோக்களைப் பகிர்வார். அப்படி ஒரு முறை  அவர் அனுப்பிய வீடியோவைப் பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.   . ஏனென்றால் அது எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவியின் அந்தரங்க வீடியோ .அது என்னை அதிர வைத்தது மட்டுமல்ல அது பற்றித் தீவிரமாகச்  சிந்திக்கவும் வைத்தது. அப்படிப்பட்டவை பற்றிய விவரம் சேகரிக்க இறங்கிய போது பல அதிர்ச்சி தரும் விஷயங்கள் தெரிய வந்தன. இப்படி சிலர் வேடிக்கையாக எடுத்துக் கொள்கிற வீடியோக்கள் உலகம் முழுக்க செல்கின்றன . அது தொடர்பாகப் பல கோடி வியாபாரம் நட க்கிறது. அதன் பின்னணியில் பெரிய மாபியா கும்பலே இயங்கி வருகிறது.

இவை எனக்குப் புரிந்ததும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் சமூகத்தில் தான் நாமும் இருக்கிறோம். இது பற்றிய விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது என் கடமையாகத் தோன்றியது.

இந்தப் படக் கதை பற்றிப் பலரும்  பயந்தார்கள் .எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது . முதலில்  என் மனைவியைச் சமாதானப்படுத்திப்  புரிய வைக்கப் படாத பாடுபட்டேன். இப்படியே நடிகர்கள் ,தொழில் நுட்பக் கலைஞர்கள் எல்லாரையும் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது . மற்றவர்கள் போல நீங்களும் வியாபார சினிமா எடுத்து விட்டுப் போகலாமே என்று இப்போதும் எல்லாரும் கேட்கிறார்கள்.  ஆனால் இப்போது நான்  சொல்கிறேன். இது ஆபாசமான படமல்ல.  ஆபாசமான உலகம் பற்றி நாகரிகமாகச் சொல்லியிருக்கிறோம். இன்று வரும் எத்தனையோ படங்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை . ஏதாவது கூச்சப்படுகிற மாதிரி சங்கோஜப் படுகிற மாதிரி காட்சிகள் இருக்கும். இதைத்  தமிழிலும் இந்தியிலும் எடுத்திருக்கிறோம். சென்சாரில் ரிவைசிங் கமிட்டி போனபோது கமிட்டியில் இருந்த  பிரபல இந்தி  இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படம் பார்த்து விட்டு துணிச்சலான முயற்சி, சமுதாயத்துக்குத் தேவையான படம் என்று பாராட்டினார்.

எல்லாரும் சொல்கிறார்கள் வணிகப் படம் எடுத்து ஏன் சம்பாதிக்கக் கூடாது என்று. இன்று எத்தனை பேர் படமெடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.? நான் சமீபத்தில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை படித்தேன். அரசுப் பள்ளிகளில் போதிய கழிவறை இல்லாமல் பெண் பிள்ளைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள் என்று . இது எவ்வளவு பெரிய கொடுமை . நான் இப்போது மனப்பூர்வமாகச்  சொல்கிறேன்  இந்தப் படத்தில் எனக்கு லாபம் வந்தால் அதில் பெரும் பகுதியை  அரசுப் பள்ளிகளுக்குக்  கழிப்பறை கட்டப் பயன்படுத்துவேன் ” இவ்வாறு இயக்குநர் பேசினார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பு வடிவமைப்பாளர் அக்ஷயா பேசும் போது,

” நான் நடிப்பிலிருந்து தயாரிப்புத் துறைக்கு வந்தவள்.இது ஆண்கள் நிறைய பேர் பணியாற்றிய படக் குழு . சுற்றிலும் ஆண்கள் நடுவில் நான் மட்டும் பெண் என்று பணியாற்றினாலும் எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. முழு சுதந்திரம் இருந்தது.. ” என்றார்.

நாயகன் அபிநவ் பேசும்போது, “என்னை நடிக்கத் தேர்வு செய்யும் முன் இயக்குநர்  கண்டிப்பாக இருந்தார். நடிக்கத் தொடங்கிய பின் சுதந்திரமாக இயங்க முடிந்தது. இந்தப் படம் சமுதாயத்துக்கு  அவசியமான படம்” என்றார்.

இன்னொரு நாயகன் நிஜய் பேசும் போது,

” சவாலான விஷயத்தை  துணிச்சலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ” என்றார்.

மற்றொரு நாயகன் ஷான் பேசும் போது,

” படத்தில் நான் கதாநாயகன் அல்ல. இங்குள்ள எல்லாருமே கதாநாயகர்கள் தான். இந்தப் படத்தை எடுக்க இயக்குநர்  இந்த திரையுலகம் , நண்பர்கள்  ,குடும்பம்  என எல்லாவற் றையும் தாண்டி எடுக்க வேண்டியிருந்தது” என்றார்.

நடிகர் அஜய்ராஜ் பேசும் போது ,

” நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்து இப்போது சென்னையில் செட்டிலாகியிருக்கிறேன். உத்தம வில்லன் , பொறியாளன் ,தாயம் படங்களைத் தொடர்ந்து இது எனக்கு ஐந்தாவது படம். அடிப்படையில் நான் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் . சமூகக் குற்றம்  பற்றி துணிச்சலாக  இப்படம் சொல்கிறது. ” என்றார்.

நாயகி ஆஹிருதி சிங் பேசும் போது ,

” இப்படத்தில்  நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.. மகிழ்ச்சியான அனுபவம். படக் குழுவுக்கு  என் நன்றி.” என்றார்.

கலை இயக்குநர் கதிர் பேசும் போது,

“சஜோ எனக்கு 15 ஆண்டுகால நண்பர். எதையும் துல்லியமாகப் பார்ப்பவர். இந்தக் கதையை என்னிடம் கூறிய போது நன்றாக இருந்தது. ஆனால் பயமாக இருந்தது. அவருக்காக படத்தில் நான் பணியாற்றினேன். இருந்தாலும் படத்தைக் காட்டிய பின் தான் என் பெயரைப் போட வேண்டும்  என்றேன். அவ்வளவு பயமுறுத்தியது கதை. ஆனால்  படம் பார்த்த பின் சமாதானமானேன். நாக​ரீ​கமாகவே எடுத்திருக்கிறார். ” என்றார்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.