Naisat Media Works சார்பில் சீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ஆகியோர் நடிப்பில் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும்  ’எமகாதகி’

இதே கிராமத்தில் இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் திருவிழா நடைபெற இருப்பதால் அதற்கான வேலைகளை தொடங்க ஊர் மக்கள் தயாராகி வருகிறார்கள். இதனையடுத்து சுபாஷ் ராமசாமி கோவில் சிலையின் கீரிடத்தை தனது நண்பர்களின் உதவியோடு திருடி அதை அடமானம் வைத்து தொழில் தொடங்கி அதில் நஷ்டமும் அடைகிறார்.

ஒரு நாள் கடும் கோபத்தோடு வீட்டிற்கு வரும் ராஜூ, மனைவி கீதாவை அடித்துவிடுகிறார். எதற்காக அடித்தீர்கள் என்று மகள் ரூபா கேட்க, ரூபாவையும் தகாத வார்த்தை கூறி அடித்துவிடுகிறார் ராஜூ. இதனையடுத்து ரூபா. நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். தனது மகள் ரூபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார் கீதா.

இந்நிலையில், இறுதி சடங்கு செய்வதற்காக ரூபா பிணத்தை வீட்டில் இருந்து வெளியே தூக்கி வர முயல்கின்றனர் கிராமத்து இளைஞர்கள். அப்போது, பிணத்தை தூக்க முடியாமல் அதிகனம் கனக்க, ஊர் மக்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் ரூபாவின் உடலை வீட்டை விட்டு வெளியே கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த தகவல் போலீசுக்கு தெரிய வர போலீஸ் அங்கு வருகிறது. இறுதியில் ரூபா பிணம் வீட்டை விட்டு வெளியே வாரத்திற்கு காரணம் என்ன? ரூபா தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது கொலை செய்யப்பட்டாரா ? என்பதை போலீஸ் கண்டு பிடித்தார்களா? இல்லையா? என்பதே ’எமகாதகி’ படத்தின் மீதிக்கதை.

லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரூபா மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டவராக எதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார். பிணமாக படம் முழுவதும் அசத்த்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேந்திர பிரசாத் கிராமத்து இளைஞராக கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் கீதா இறுதி காட்சியில் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார்.  ரூபாவின் அப்பாவாக நடித்த ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நன்றாகவே பொருந்திருக்கிறார். 

ஜெசின் ஜார்ஜின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது . சுஜித் சாரங்க் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.

ஜாதி மறுப்பு திருமண, காதல், திருட்டு, போட்டி, பொறாமை ஆகியவற்றை மையமாக வைத்து அனைவரும் வியக்கும் விதத்தில் திரைப்படத்தாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பெபின் ஜார்ஜ் ஜெயசீலன் ஒரு பின்ஹத்தடை வைத்து கொண்டு சமூகத்திற்கு தேவையான கருத்து சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’எமகாதகி’ குறிஞ்சி பூ

மதிப்பீடு : 4.25/5

நடிகர்கள்: ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராஜப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா

இசை: ஜெசின் ஜார்ஜ்

இயக்கம்: பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்

மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)

Leave a Reply

Your email address will not be published.