இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும் மற்றும் உணர்ச்சிகரமான பயணத்தைத் தவறவிடாதீர்கள்.
வேதா, சம்விதன் கா ரக்ஷக் கதைக்களம் மேஜர் அபிமன்யு கன்வர் [ஜான் ஆபிரகாம்], கோர்ட் மார்ஷியல் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, நீதிக்கான இடைவிடாத தேடலில் உள்ள உறுதியான தலித் பெண்ணான வேதா [ஷர்வரி] உடன் இணைந்து பயணிக்கிறார் அபிமன்யு. கிராமத்தின் தலைவர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் இயங்கும் கிராமத்தின் ஆழமான வேரூன்றிய சமூக சவால்களை இருவரும் எதிர்கொள்கின்றனர், அவர்கள் வலிமிகுந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரப் பல சக்திகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்த திரைப்படம் இந்த வலி மிகுந்த பயணத்தின் பக்கங்களைக் காட்டுகிறது.
நிகில் அத்வானியின் இயக்கத்தில், வேதா, சம்விதன் கா ரக்ஷக், திரைப்படத்தில் தீவிரமான ஆக்ஷனுடன் ஒரு தீவிரமான சமூகச் செய்தியும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த தசராவில், பார்வையாளர்கள் அக்டோபர் 10 முதல் ZEE5 இல் வேதா, சம்விதன் கா ரக்ஷக் படத்தினை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளிக்கலாம்.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
‘வேதா’ சக்தி வாய்ந்த கதை மற்றும் ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் மூலம் அழுத்தமான சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதை ZEE5 உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். சமூக நியாயம் மற்றும் சாதிய ரீதியலான பிரச்சனைகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை ‘வேதா’ திரைப்படம் பேசும். தரமான, மிகச்சிறப்பான படைப்புகளை வழங்கி வரும் ZEE5 இன் அர்ப்பணிப்புமிக்க பயணத்தில், அவர்களுடன் இணைந்து, இந்த உணர்வுப்பூர்வமான படைப்பை வழங்குவது மகிழ்ச்சி. இப்படைப்பு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
அக்டோபர் 10 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்!
Leave a Reply