பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் ஆகப்போகும் சூழலில் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் 90வது படமான ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவா , அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள் .முதன் முறையாக இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் . கதாநாயகிகளாக மஞ்சிமா மோகன் , பிரியா பவனி சங்கர் நடிக்க காரைக்குடி செட்டியாராக ” அப்பச்சி ” என்ற வித்யாசமான வேடத்தில் ராதாரவி நடிக்கிறார்.இவர்களுடன் ரோபோசங்கர் , பால சரவணன் நகைசுவை வேடத்திலும் இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்தி ,ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார் .

“களத்தில் சந்திப்போம்” படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது . நட்பு , காதல் , நகைச்சுவை ,அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது .

நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரம்மாண்டமான நடிகர் கூட்டத்துடன் ஒரு படம் திரைக்கு வர இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மேலும் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது தமிழ் சினிமாவில் மிக அரிதாகவே நடக்கும் விஷயம் என்பதால் அனைவரின் கவனத்தையும் பெற்று வெளியாகத் தயாராக இருக்கிறது.

தற்போது களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது . டீசரை நடிகர் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம் – N .ராஜசேகர்
தயாரிப்பு – சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் – ஆர் .அசோக்
இசை – யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் – பா .விஜய் , விவேகா
ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு – தினேஷ் பொன்ராஜ்
கலை – M .முருகன்
நடனம் – ராஜு சுந்தரம்
சண்டை பயிற்சி – பிரதீப்
நிர்வாக தயாரிப்பு – ஸ்ரீநாத் ராஜா மணி
தயாரிப்பு மேற்பார்வை – புதுக்கோட்டை M . நாகு , R .ரமேஷ்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, ரியாஸ் கே அஹ்மத்

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.