Jayam Ravi, Hansika Motwani, Aravind Swamy, Akshara Gowda starring Bogan Tamil Movie Stills. Directed by Lakshman and Produced by Prabhu Deva. Music by D.Imman. PRO – Mounam Ravi.
ஜெயம்ரவி – அரவிந்த்சாமி நடிக்கிறார்கள்
பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக்களம் திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பல பிரமாண்டமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ரோமியோ ஜூலியட் யூனிட்டானா ஜெயம்ரவி, ஹன்சிகா, டைரக்டர் லக்ஷ்மன், இமான், வி.டி.வி.கணேஷ் கூட்டணியில் “ போகன் “ படத்தையும் மிகப் பிரமாண்டமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார். ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்கிறார். அரவிந்த்சாமியும் ஹீரோ – வில்லன் என இரு வேறு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே வேடம் தான் ஆனால் இரு வேறு குணாதிசுயங்களை வெளிக் கொணரும் வேடங்கள் இருவருக்கும். நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின், நாகேந்திரபிரசாத் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சௌந்தர்ராஜன்
இசை – D.இமான்
பாடல்கள் – தாமரை, மதன்கார்க்கி, ரோகேஷ்
கலை – மிலன்
நடனம் – ராஜு சுந்தரம், பிருந்தா, ஷெரீப்
ஸ்டன்ட் – திலீப் சுப்பராயன்
எடிட்டிங் – ஆண்டனி
தயாரிப்பு – டாக்டர். கே. கணேஷ்
எழுதி இயக்குபவர் – லக்ஷ்மன்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
ரோமியோ ஜூலியட் எப்படி ஜாலியான காதல் கதையாக இருந்ததோ. போகன் அப்படி இல்லை இது பர பரப்பான ஆக்ஷன் திரில்லராக வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.இதிலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும். காக்கி சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் இயக்குனர் லக்ஷ்மன்.
Leave a Reply