Kadalai Movie Stills – Ma.ga.pa.Anand,Ishwarya Rajesh

Ma.ga.pa.Anand,Ishwarya Rajesh Starning Kadalai Movie Stills. Music by sam Director Suresh. PRO – Riaz Ahamed.

மா.கா.பா.ஆனந்த்   ஐஸ்வர்யா ராஜேஷின் கடலை                                                                                                 கா.பா.ஆனந்த்   ‘கடலை’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை. கிராமத்தில் நிலத்தில் விளையும் ‘கடலை’ பேமஸ் என்றால், நகரத்தில் இளசுகளின் வார்த்தையில் விளையும் ‘கடலை’ பேமஸ். நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்த படமாக கொடுத்துள்ளார் .இயக்குனர் சஹாய சுரேஷ். வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் எடுக்கவில்லை; இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவையான கருத்துகளும் இப்படத்தில் உள்ளது
கடலை என்றால் ஹீரோயின் இல்லாமல் இருக்குமா? இந்த படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ் கதா நாயகியாக நடித்துள்ளார்.  ஐஸ்வர்யா ராஜேஷ், மா.கா.பா.வுடன் இணையும் படம் இது.
மேலும் இந்த படத்தில், பொன்வண்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். யோகி பாபு நகைசுவையில் கலக்கியுள்ளார். ஜான்விஜய் கதையில் நகைச்சுவை கலந்த வில்லனாக வருகின்றார். இது தவிர மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மால் என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடிக்கும் மெல்லிசை படத்திற்கு இசையமைக்கும் ‘சாம் C S’ தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். எடிட்டிங் ஏ.எல்.ரமேஷ் கவனிக்க ,கலை இயக்குனராக  எட்வர்ட் கலைமணி பணியாற்ற , எழுத்தாளர் வாமுகோமு மற்றும் இயக்குனர் சஹாய சுரேஷ்  வசனம் எழுத ,. நா.முத்துகுமார், சாம் C S , இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி  ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சண்டை இயக்குனர் லீ எம்.கே.முருகன். பாபா பாஸ்கர், ரதிகா, தினா, அஜய் சிவசங்கர் நடனம் அமைக்க, தயாரிப்பு மேற்பார்வை – M செந்தில் ,N .ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.