பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தானாநாயுடு, பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “கைலா”
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பங்களா ஒன்றின் வாசல் அருகே குறிப்பிட்ட தேதியில் 3 பேர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். போலீசார் இவற்றை விபத்துகள் என்றே விசாரணையை முடிக்கிறார்கள். அந்த பகுதி மக்களோ ஆவி தான் கொலை செய்வதாக கூறுகிறார்கள்.
நாயகி தானாநாயுடு. எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். .
தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார். பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் தொடங்குகிறார். இன்னொரு பக்கம், ஒரு தாய் அவருடைய சிறுவயது மகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இவர்களை கொன்றது யார்? பேய் பங்களாவில் நடைபெறும் மர்மங்களை கதாநாயகி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை
நாயகி தானாநாயுடு தனது முதல் படத்திலே சிறப்பான நடிப்பபை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் படத்தின் இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன். வில்லன் வேடத்துக்குப் பொருத்தமான பார்வை உடல்மொழி ஆகியன அமைந்திருக்கின்றன.
கவுசல்யா தனது உணர்வுபூர்வ நடிப்பால் இரண்டாம் பாதியை தாங்கி பிடிக்கிறார். பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். பரணி செல்வத்தின் ஒளிப்பதிவிலும் ஸ்ரவனின் இசையிலும் படத்துக்கான திகில் கூடுகிறது.
நடிகை தானா நாயுடு
இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்
இசை ஸ்ரவன்
மக்கள் தொடர்பு மௌனம் ரவி
Leave a Reply