ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு. 

விக்ராந்த் தனது வாய்பேச முடியாத, காது கேட்காத மகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் இல்லாததால், குழந்தையை காப்பாற்ற வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் விக்ராந்த், சுசீந்திரன் உள்ளிட்ட நால்வர் எதிர்ப்படும் அனைவரையும் தாக்கி விட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் தங்களை தடுத்து நிறுத்தவரும் உதவி கமிஷனர் மிஷ்கினையும் தாக்கிவிட்டு நால்வரில் ஒருவர் சுடப்பட்ட நிலையில் மற்ற மூவரும் காரில் தப்பிக்கின்றனர்

நகரின் இன்னொரு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளாகி விட, அந்த பகுதியிலேயே தப்பிப்பதற்காக சுற்றி சுற்றி வருகின்றனர்.. அவர்கள் அங்கு இருப்பதை அறிந்து போலீஸ் அந்த மொத்த பகுதியையும் ரவுண்டப் செய்கிறது.

இந்த நிலையில் அதே பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டின் மாடியில் தங்கியிருந்து சப்பாத்தி தயாரிப்பவர்கள் என்கிற பெயரில் வெடிகுண்டுகளை தயாரித்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் இந்த கொள்ளையர்கள் குறித்த எச்சரிக்கை விடும் போலீசார் இந்த தீவிரவாதிகளுக்கும் சாதாரண மனிதர்கள் எனக்கருதி பாதுகாப்புத் தருகின்றனர். இதனால் இந்த தீவிரவாதிகள் அன்றைய தினம் நகரில் வெடிகுண்டு ஒன்றை வெடிப்பதற்காக போட்டிருந்த திட்டம் தடைபடுகிறது.

இதையடுத்து கொள்ளையர்கள் பிடிபட்டார்களா..? குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஒரே பரபரப்பு.. பரபரப்பு தான்.. விக்ராந்த் சுசீந்திரன் இருவரும் படம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.. நாமும் கூடவே சேர்ந்து ஓடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. உதவி கமிஷனராக வரும் மிஷ்கின் அதிரடி அடாவடி போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி உள்ளார். அவரது வசன உச்சரிப்பும் அதை வெளிப்படுத்தும் முகபாவமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவும் ஜேக்ஸ் பிஜாயின் படத்தை விறுவிறுப்பாக்க முயற்சித்துள்ளது. ராமாராவின் படத்தொகுப்பில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.படத்தின் கிளைமாக்ஸில் ஒரு மிகப்பெரிய சஸ்பென்ஸ் வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா..

Leave a Reply

Your email address will not be published.