கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள பங்கா  படத்தில் நடிப்பதற்காக கங்கனா கடுமையாக கபடி பயிற்சி மேற்கொண்டு நடித்துள்ளார் . இவருடன் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, யோக்யா பாஷின்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே ஐ பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் கபடி ஆர்வத்தால் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கின்றன என்பதை சொல்லும் படம் .

இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.