தமிழக முதல்வர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், ரோட்டரி கிளப்பும் இணைந்து திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரை உலக்கினருக்கு கொரானா தடுப்பூசி போடும் முகாம் பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மாண்புமிகு.மா.சுப்ரமணியம், மற்றும் ரோட்டரி கிளப், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர்கள் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், ஆல் இந்தியா பிலிம் பேடேரஷன் தலைவர் எஸ்.தாணு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் திரு.காட்ரகட்ட பிரசாத், செயலாளர் திரு.ரவி கொட்டாரகார, கில்ட் தலைவர் ஜாகுவார் தங்கம், fefsi நிர்வாகிகள், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10,00,000 வழங்கியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

PRO

VIJAYAMURALEE
GLAMOURSATHYA

Leave a Reply

Your email address will not be published.