2டி எண்ட்ர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, நரேன், கலையரசன், சூரி, சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதிஷ், வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா, நமோ நாரயணன், ஆகியோர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் “உடன்பிறப்பே”.
சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவை அதே ஊரில் ஆசிரியராக வேலை பார்க்கும் சமுத்திரக்கனிக்கு திருமணம் செய்து வைக்கிறார். ஒரே குடும்பமாக இருக்கும் இவர்களுக்குள் எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் மனக்கசப்பு ஏற்படுகிறது. சமுத்திரக்கனி ஜோதிகாவை அழைத்துக்கொண்டு தனிக் குடித்தனம் செல்கிறார். அப்போது ஏற்படும் பகை 15 வருடமாக சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையே தொடர்கிறது. இந்நிலையில் சசிகுமாரின் மகன் ஊரிலிருந்து வருகிறான்
ஜோதிகாவின் மகளை சசிகுமாரின் மகனுக்கு தரவிரும்பாத சமுத்திரக்கனி அவரை வேறு மாப்பிள்ளைக்கு தர முடிவு செய்து நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அதேசமயம் சசிகுமார் குடும்ப சகிதமாக வந்து சமுத்திரக்கனியிடம் பெண் கேட்கிறார். அவர தர மறுக்கிறார். கூடியிருக்கும் ஊர்மக்கள் பேசி திருமண நிச்சயதார்த்தத்துக்கு சமுத்திரக்கனியை ஒப்புக்கொள்ளச் செய்கின்றனர். . இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகள் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடுகிறார். சசிகுமார் மீது இருக்கும் கோபத்தில்தான் யாரோ ரவுடிகள் தன் மகளை குத்திவிட்டதாக சமுத்திரக்கனி எண்ணுகிறார். அவரை போலீசில் பிடித்து தர துடிக்கிறார். இறுதியில் இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மாதங்கி என்ற கிராமத்து பெண் அம்சத்துக்கே உரியா பண்புகளுடன் கதாபாத்திரத்தில் ஊறிப்போய் நடித்திருக்கிறார் இது இவர் நடித்திருக்கும் 50 வது படம் உடன்பிறப்பே. ஜோதிகா பல இடங்களில் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். .அண்ணன் மீதான பாசத்தில் இவரது செயல்கள் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.
சசிகுமார் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றத்தில் வந்தாலும் நடிப்பில் கம்பீரத்தை காட்டி கலக்குகிறார்ஆசிரியராக மனதில் பதிகிறார் சமுத்திரகனி. சாதுவாக இயல்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வழக்கமான சமுத்திரகனியாக இல்லாமல் வித்தியாசமாக நடித்து கவர்ந்திருக்கிறார். சூரியின் காமெடி காட்சிகள் படத்திற்கு பலம். குறிப்பாக தாமரை மலர்ந்தே தீரும் என்னும் காட்சி சிறப்பு.
இமான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிராமத்து அழகு மாறாமல் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் வேல்ராஜ்.
அண்ணன் தங்கை குடும்ப சென்டிமென்ட்டில் கொஞ்சம் கிரைம், ஆக்ஷன், நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படமாக வழங்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.
மொத்தத்தில் ‘உடன்பிறப்பே’ அனைவரும் பார்க்க வேண்டிய படம்
நடிப்பு: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, நரேன், கலையரசன், சூரி, சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதிஷ், வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா, நமோ நாரயணன்,
இசை: டி.இமான்
தயாரிப்பு: ஜோதிகா, சூர்யா (2டி எண்ட்ர்டெயின்மெண்ட்)
இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்
இயக்கம்: இரா சரவணன்
பி.ஆர். ஒ: யுவராஜ்
Leave a Reply