தீப ஔி திருநாளை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் மெகா ஹிட் திரைப்படம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, நவம்பர் 4, காலை 8.30 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் திரைப்படப் பாடலின் வெற்றியைத் தீர்மானிப்பது இனிய அழகியலா.? ஆழ்ந்த கருத்தா.? என்ற தலைப்பில் திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் சிந்திக்க வைக்கும் கலகலப்பான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா , பசுபதி, ஜான் கொக்கன், ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் பலர் நடிப்பில் ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்திய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம், திரையரங்குக்கு பதிலாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ஔிபரப்பாக இருக்கிறது.
மதியம் 2.30 மணிக்கு “வைகைப் புயல் வடிவேலு” பங்கேற்கும் கலகலப்பான சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.
Leave a Reply