படத்திற்கு படம் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் பலரின் பாராட்டைப் பெற்றவர் நடிகர் அஜ்மல். தற்போது ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் சார்பாக தயாரிப்பாளர் B.சதிஷ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார். “தீர்க்கதரிசி” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர்.
நடிகர் அஜ்மலுடன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் பேரன் துஷ்யந்த், “மத்திய சென்னை”, “காட்டு பய சார் இந்த காளி” படங்களின் மூலம் பலரின் பாராட்டை பெற்ற நடிகர் ஜெய்வந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணையும் “தீர்க்கதரிசி” திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் இனிதே துவங்கியது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பு – B.சதிஷ் குமார் (ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட்)
இயக்கம் – P.G.மோகன் & L.R. சுந்தரபாண்டி
இசை – பாலசுப்ரமணியம் G
ஒளிப்பதிவு – ஜெ. லட்சுமண் குமார்
கலை – ப. ராஜூ
படத்தொகுப்பு – C.K. ரஞ்சித் குமார்
பாடல்கள் – விவேகா, விவேக்
சண்டைப்பயிற்சி – டான் அசோக்
தயாரிப்பு மேற்பார்வை – S. கிருஷ்ணமூர்த்தி
நிர்வாக தயாரிப்பு – ராமு.M
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – R.R. தீபன் ராஜ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Leave a Reply