ஸ்டுடியோ க்ரீன் கே. ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் டீகே. இயக்கத்தில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’காட்டேரி’
வைபவ் அவரது மனைவி சோனம் பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமம் ஒன்றுக்கு செல்கின்றனர். அந்த கிராமத்தில் இருந்தவர்கள் கோவில் திருவிழா நடக்கும்போது மின்சாரம் தாக்கி ஒட்டுமொத்தமாக பல வருடங்களுக்கு முன்பே இறந்ததால் எல்லோரும் பேயாக அலைகின்றனர். புதையலை தேடி வந்தவர்களை பேய் கூட்டம் பயமுறுத்துகிறது.
வைபவ் எப்படியாவது இந்த கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால் மீண்டும் அதே கிராமத்திற்கு வருகிறார்கள்.. இறுதியில் வைபவ் தன் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் கிராமத்தில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே ’காட்டேரி’ படத்தின் மீதிக்கதை.
வைபவ் வழக்கம்போல் நடிப்பில் கவர்கிறார்.அவர் பயப்படும் காட்சிகளில் நமக்கு சிரிப்பு வருகிறது. சோனம் பஜ்வா, ஆத்மிகா ஆகியோர் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். பொன்னம்பலம், ரவி மரியா, ஜான் விஜய், மைம் கோபி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மாத்தம்மா எனும் பாத்திரத்தில் வருகிற வரலட்சுமிசரத்குமார், நான் அழகா இருக்கேனா? எனக் கேட்கும்போதே பயப்பட வைக்கிறார். அவர் தொடர்பான அந்த ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திகில் கிளப்புகின்ற பேய்ப்படங்களுக்குப் பின்னணி இசை மிகவும் முக்கியம். அந்தப் பொறுப்பை பிசாசுத்தனமான வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.என்.பிரசாத்.
பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகும் அங்கு ஆபத்துகளும் ஒருங்கே படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. யாமிருக்க பயமே என்ற காமெடி பேய் படத்தை இயக்கிய டீகே தற்போது பேய் கதையில் காட்டேரியையும் கூட்டு சேர்த்து காமெடி திகில் கதையாக காட்டேரியை உருவாக்கி இருக்கிறார். கதை வித்தியாசமாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
நடிகர்கள்: வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா
இசை: பிரசாத் எஸ்.என்.
இயக்கம்: டீகே.
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Leave a Reply