கணேஷ் என்டர்டைன்மென்ட் & நஹர் ஃபிலிம்ஸ் சார்பாக T.R.ரமேஷ் & ஜாகிர் உசேன் தயாரிப்பில் வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘, ‘கடமையை செய்’
கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யா இவருடைய மனைவி யாஷிகா ஆனந்த் மற்றும் தனது குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். திடீரென அவருக்கு வேலை போக அதனால் கிடைத்த வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. எனவே, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யூரிட்டியாக வேலைக்கு செல்கிறார்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருப்போர் அனைவர் உயிருக்கும் ஆபத்து என்பது எஸ்.ஜே.சூர்யாவுக்குத் தெரியவருகிறது. அதேநேரம், ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாகிறார். நடக்கவியலாது, பேசவியலாது எனும் நிலை. அந்நிலையிலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளைக் காப்பாற்றத் துடிக்கிறார். இறுதியில் எஸ்.ஜே.சூர்யா அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ‘கடமையை செய்’ படத்தின் மீதிக்கதை.
நாயகன் எஸ்.ஜே.சூர்யா மற்ற படங்களை போல் இல்லாமல் சற்று எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டாம் பாதியில் வசனமே இல்லாமல் உடல் அசைவுகளாலும், முகபாவனைகளால் மட்டுமே தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். கதையின் நாயகியாக நடிக்க வைத்த இயக்குநரின் நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறார்.
மொட்ட ராஜேந்திரன், வின்செண்ட் அசோகன், சேசு, ரேகா நாயர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் வேங்கட் ராகவன் சிறு வேடத்தில் நடித்து நம்மை கவர்கிறார்.
வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு கதைக்குப் பலம் சேர்க்கிறது. அருண்ராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
இயக்குனர் வெங்கட்ராகவன்,கட்டுமானத் துறையில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கதையை எழுதி ஒரு வித்தியாசமான வேடத்தை உருவாக்கி அதற்குப் பொருத்தமாக எஸ்.ஜே.சூர்யாவைத் பயன்படுத்தி இருப்பது படத்திற்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிகர்கள்: எஸ்.ஜே.சூர்யா யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் அசோகன்
இசை: அருண் ராஜ்
இயக்கம்: வெங்கட் ராகவன்.
மக்கள் தொடர்பு : மணவை புவன்

Leave a Reply