பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் சினிஷ் தயாரிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இளவரசு, இளங்கோ ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பார்க்கிங்’
சென்னையில் ஐடியில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஸ் கல்யாண்) கர்ப்பிணி மனைவியுடன் புது வீட்டுக்கு வாடகைக்கு வருகிறார் கீழ் தளத்தில் இருக்கும் அரசு ஊழியரான எம்.எஸ்.பாஸ்கர், மனைவி ராமா மற்றும் மகள் பிரார்த்தனாவுடன் 10 வருடங்களாக இதே இடத்தில் வாழ்ந்து வருகிறார்.
அங்கு குடி வந்த சில நாட்களில் ஹரிஷ் கல்யாண் புதிதாக கார் ஒன்றை வாங்குகிறார். அந்த காரை அவர் வீட்டில் இருக்கும் சிறிய பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க, ஏற்கனவே அந்த இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கரும் புதிய கார் வாங்குகிறார் .இதனால் வீட்டு பார்க்கிங்கில் யார் காரை விடுவது என்பதில் மோதல் ஏற்படுகிறது.
இதனையடுத்து முதலில் பேச்சில் ஆரம்பிக்கும் மோதல், பிறகு காவல் நிலையம் வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் உயிர் போகும் அளவிற்கு மோதிக் கொள்ள நிறைமாத கர்ப்பிணியான இந்துஜாவிற்கு பிரசவவலி வருகிறது. இறுதியில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே ’பார்க்கிங்’ படத்தின் மீதிக்கதை.
ஐடி நிறுவன வேடத்தில் நடித்திருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண், இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
இதுவரை காதல் மற்றும் ரொமான்ஸ் நாயகனாக பார்த்த ஹரிஷ் இந்த படத்தின் மூலம் ஒரு எதார்த்த நாயகன் தமிழ் சீனிவாவிற்கு கிடைத்திருக்கிறார். என்று கூறு அளவிற்கு இவருடைய நடிப்பு இருக்கிறது. ஹரிஷ் கல்யாணின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜா,கர்ப்பிணி வேடத்திற்கு ஏற்ற சரியான தேர்வாகி இருக்கிறார்.
அரசு ஊழியராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அந்த பதவிக்கு ஏற்ற நேர்மையானவராக வருகிறார் ,தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லத்தனத்தை முகத்தில் காட்டி மிரட்டுகிறார். 60 வயதை நெருங்கினாலும் ஈகோவினால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருக்கும் ரமா, மகளாக நடித்திருக்கும் பிரார்த்தனா, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் கொடுத்த வேலையை குறைவில்லாமல் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னை இசை கதைக்கு ஏற்றவாறு உள்ளது. ஒளிப்பதிவாலர் ஜிஜு சன்னி, ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
வீட்டில் குடியிருப்பபவர்களால் வீட்டின் உரிமையாளர் என்ன என்ன பிரச்ச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் மனிதாபிமானத்தோடு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில் ’பார்க்கிங்’ பொறுமை , நிதானம் தேவை
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : ஹரிஸ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ரமா, பிராதனா, இளங்கோ
இசை: சாம்.சி.எஸ்.
இயக்கம்: ராம்குமார் பாலகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா, நாசர் (D’One)
Leave a Reply