திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு  தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்  இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அஞ்சாமை’

திண்டுக்கல் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் வசித்து வரும் விதார்த் மனைவி வாணி போஜன் மகன்  கிருத்திக் மற்றும் மகளுடன்  மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்  அரசு பள்ளியில் படிக்கும் இவரது மகன்  கிருத்திக் 12வது வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடத்தை  பிடிக்கிறார்.

மருத்துவராக வேண்டும் என்பது கிருத்திக்கின் ஆசை அதற்காக வயல், மாடு என விற்று படிக்க வைக்கிறார்.  விதார்த்  மகனும் நன்றாக படித்து ‘நீட்’ எனப்படுகிற மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகிறான். தமிழ்நாட்டிலிருந்து ஜெய்ப்பூர் சென்று தேர்வு எழுதுகிற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

போதிய பண வசதியில்லாத சூழலில், மகனை அழைத்துக் கொண்டு  ஜெய்ப்பூர்  செல்லும் விதார்த் எதிர்பாராத  விதமாக அங்கேயே  உயிரை  விடுகிறார். மனம் நொறுங்கிப்போன மகனுக்கு காவல்துறை அதிகாரியான ரகுமானிடன் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு போட சொல்லுகிறார். இறுதியில் நீதிமன்றம் செல்லும் இந்த வழக்கில் மாணவருக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? எனபதே  ’அஞ்சாமை’ படத்தின்  மீதிக்கதை.

கூத்துக் கலைஞராக நடித்திருக்கும் நாயகன் விதார்த்  மகனின் டாக்டர் ஆசையை நிறைவேற்ற போராடும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மகன் தவறான முடிவு எடுத்து  விடக்கூடாது என்பதற்காக  டேபிள் ஃபேன் மாற்றுவது கிணற்றை மூடுவது என ஒரு தந்தையின் வலியை இவரது நடிப்பின் மூலம்  கண் முன் கொண்டு வந்து  நிறுத்தியிருக்கிறார்.

விதார்த் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன் இரண்டு  குழந்தைகளுக்கு  தாயாக நடித்திருக்கிறார். பெயருக்கு நாயகியாக இல்லாமல் பெயர் எடுக்கும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கிறது. மகனாக நடித்துள்ள  கிருத்திக் மோகன் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக உள்ளார்.. சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் பிறகு நீதி கேட்டுக்கும் வக்கீலாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் ரகுமான் நீதிமன்றத்தில் ரகுமான் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும், இந்த மக்கள் நமது அரசாங்கத்தின் முன்வைக்கும் நியாயமான கேள்விகளாகவே உள்ளது.

யாருக்கும் பயப்படாத, எதற்கும் விலைபோகாத நீதிபதியாக பாலச்சந்திரன் ஐ.எ.எஸ்.ரேகா நாயருக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

ராகவ் பிரசாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி  இசை கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது. கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

உண்மை  சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார்  இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் நீட் தேர்வு நெருக்கடியால் மருத்துவப் படிப்பை கனவான கொண்ட மாணவ, மானவிகள் சந்தித்த, சந்திக்கிற பிரச்சனைகளை எடுத்துக் காட்டியதோடு நின்றுவிடாமல், பெற்றோர்களின் வலியையும் பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ’அஞ்சாமை’  மாணவர்களின் போராட்டம்

மதிப்பீடு : 3.5 / 5

நடிகர்கள் : விதார்த், வாணி போஜன், ரகுமான்,  கிருத்திக் மோகன்

இசை: ராகவ் பிரசாத்

இயக்கம்: எஸ் பி சுப்புராமன்

மக்கள் தொடர்பு : ஜான்சன்

Leave a Reply

Your email address will not be published.