எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் பாரி இளவழகன் இயக்கத்தில் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஜேசுராஜ், எஸ்.சாரதி கிருஷ்ணன், சிவா மாறன், ஏ.கே.இளவழகன் ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் ’ஜமா’ இத்திரைப்படத்தை பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் ஆகஸ்ட் 2, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தெருக்கூத்து கலை நடததி வருபவர் சேத்தன் இவரது கலைக்குழுவில் இருக்கும் நாயகன் பாரி இளவழகன் திரௌபதி, குந்தி போன்ற பெண் வேடமிட்டு திறமையாக ஆடக்கூடியவர் நாயகன் பாரிக்கு அர்ஜுனன் வேடம் விட்டு ஆட வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை அதுமட்டுமில்லாமல் சொந்தமாக ஜமா ஒன்றை நடத்த வேண்டும் என்பது அவரது விருப்பம்.
நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார் அவரது தாயார் நாயகனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை இந்நிலையில் சேத்தனின் மகன் நாயகி அம்மு அபிராமி நாயகனை காதலிக்கிறார் ஆனால் இந்த காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் சேத்தன் இறுதியில் நாயகன் பாரி இளவழகன் நாயகி அம்மு அபிராமியை திருமணம் செய்தாரா? இல்லையா? சொந்தமாக ஜமா தொடங்கினாரா? இல்லையா ? என்பதே ’ஜமா’ படத்தின் மீதிக்கதை.
கல்யாணம் எனும் கதாபாத்த்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பாரி இளவழகன் தெரு கூத்து கலைஞரின் அங்க அசைவுகள், உடல்மொழி , பேச்சு என அனைத்தையும் கண் முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். திரௌபதி, குந்தி வேடத்தில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக படத்தின் இறுதிக்காட்சியில் அர்ஜுனன்
வேடத்தில் மிரட்டியிருக்கிறார்.
நாயகியாக நடித்த்திருக்கும் அம்மு அபிராமி நாயகனை கண்களாலே மிரட்டுகிறார். நாயகன் மீது காதலை வெளிக்காட்டுவதாகட்டும் காதலுக்காக அப்பாவை எதிர்ப்பதாகட்டும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
தெரு கூத்து வாத்தியாராக நடித்திருக்கும் சேத்தன் தனது அனுபவ நடிப்பின் மூலம் கவர்கிறார். , இளவரசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீ கிருஷ்ண தயாள் நாயகனின் அம்மாவாக கேவிஎன் மணிமேகலை, பூனை என்ற பாத்திரத்தில் வசந்த் மாரிமுத்து, காலா குமார், ஏ.கே.இளவழகன், சிவ மாறன் என படத்தின் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமான உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாரி இளவழகன் இது போன்ற மண் சார்ந்த கதையை படமாக்கியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ’ஜமா’ பாரம்பரிய கலை
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள் : பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என் மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து,
இசை : இளையராஜா
இயக்கம் : பாரி இளவழகன்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply