தீவிரவாதத்தை தடுக்கும் ரகசிய பிரிவில் பணியாற்றி வரும் விஜய் இவரது மனைவி சினேகா மற்றும் மகனுடன் டெல்லியில் வாழ்ந்து வருகிறார். இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் குழுவிற்கு தலைவராக ஜெயராம் இருக்கிறார். விஜய் ரகசிய பிரிவில் வேலை செய்வது சினேகாவுக்கு தெரியாமல் இருக்கிறது.
விஜய், வேலை நிமித்தமாக தாய்லாந்திற்கு தனது மனைவி சினேகா மற்றும் தனது மகனை அழைத்துச் செல்கிறார். அங்கு நடக்கும் ஒரு விபத்தில் தனது மகனை இழக்கிறார் பிள்ளையை பறிகொடுத்ததால் விஜயை விட்டு சினேகா பிரிந்து விடுகிறார். விஜயும் தனது வேலையை விட்டுவிடுகிறார். வருடங்கள் கடந்த நிலையில் , ஏர்போர்டில் பணியாற்றி வருகிறார் விஜய்
ஒரு கட்டத்தில் தனது வேலை விசயமாக ரஷ்யாவுக்கு செல்லும் விஜய் அங்கே தன்னைப் போல் உருவம் கொண்ட இளைஞரை சந்திக்கிறார். அவரைப் பற்றி அறிந்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் விஜய்க்கு, இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் என்பது தெரிய வருகிறது. மகனை காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வருகிறார்.
மகன் கிடைத்த சந்தோஷத்தில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் மகன், ஜெயராமை கொலை செய்கிறார். இறுதியில் விஜய்யின் மகன் ஜெயராமை கொலை செய்ய காரணம் என்ன? ஜெயராமை கொலை செய்தது யார் என்பதை தந்தை விஜய் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ’கோட்’ படத்தின் மீதிக்கதை.
அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் தளபதி விஜய் ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பின் உச்சத்தை கொடுத்திருக்கிறார். காதல், பாசம்,செண்டிமெண்ட் .ஆக்ஷன் என அனைத்திலும் அதிரடி காட்டி அசத்தியிருக்கிறார்.
தந்தை விஜயின் மனைவியாக நடித்திருக்கும் சினேகா மற்றும் மகன் விஜயின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள். விஜயுடன் பணியாற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் படத்தின் கதை நகர்விற்கு துணை நிற்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் மைக் மோகனுக்கு படத்தில் பெரியதாக வேலை இல்லை. சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா சிறப்பு தோற்றத்தில் வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது. :ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி படத்தின் காட்சிகளை அழகாகவும் பிரமாண்டமாகவும் படமாகியிருக்கிறார்.
”அப்பா போலீஸ், மகன் திருடன்” என்ற ஒன்லைன் கதையை வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தின் கதையை பார்க்கும் போது கேப்டன் விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் கதையை போல இருக்கிறது. விஜய்க்காக கதையை கொஞ்சம் மாறுதல் செய்திருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் ’கோட்’ தளபதி விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம்
மதிப்பீடு : 3 / 5
நடிகர்கள்: விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், சிநேகா, மீனாட்சி சவுத்ரி
இசை: யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு: சித்தார்த் நுனி
இயக்கம்: வெங்கட் பிரபு
மக்கள் தொடர்பு : நிகில் முருகன் & ரியாஸ் கே அகமது
Leave a Reply