பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிப்பில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஹெச்.எம்.எம்’ (HMM – Hug Me More)
ஆராய்ச்சியாளராக இருக்கும் நாயகன் நரசிம்மன் ஆராய்ச்சி செய்து வைத்து இருந்த நாட்டின் பாதுகாப்பு குறித்த இணையதகவல்களை நாயகனின் கம்யூட்டரிலிருந்து அந்நிய நபர்கள் திருடியிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதை யார் செய்திருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நாயகன் நரசிம்மன்
ஊட்டியில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்கியிருக்கிறார் நாயகி சுமிராவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருடைய தோழி ஷர்மிளா அவருடைய பங்களாவிற்கு வருகிறார். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய பிறகு வீட்டை விட்டு வெளியே வர ஷர்மிளாவை முகமூடி அணிந்த மர்ம நபர் கத்தியால் குத்து கொலை செய்து விடுகிறார்.
இதனையடுத்து ஷர்மிளா கணவர் தனது மனைவியை தேடி அதே பங்களாவிற்கு வர மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதை பார்த்த அந்த முகமூடி மனிதர் இவரையும் அடித்தே கொலை செய்து விடுகிறார். அடுத்தாக வீட்டிற்குள் இருக்கும் நாயகி சுமிராவை கொலை செய்ய வீட்டிற்குள் நுழைகிறார். இறுதியில் தொடர் கொலை செய்யும் முகமூடி மனிதர் யார்? நாயகி சுமிராவை முகமூடி மனிதர் கொலை செய்தாரா? இல்லையா? என்பதே ’ஹெச்.எம்.எம்’ (HMM – Hug Me More)
கதைநாயகனாக நடித்திருக்கும் நரசிம்மன் அமைதியாக வந்து ஆக்ரோஷமான நடிப்பை கொடுத்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். கதைநாயகனாகவும் இயக்குனராகவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சுமிரா,சிவா பார்ப்பதற்கு அழகாகவும் அந்த அழகிற்கு பின்னால் ஆபத்து விளைவிப்பராகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியின் தோழியாக வரும் ஷர்மிளா மற்றும் அனுராக் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் பாடல்களே இல்லை. புரூஷ் பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு உள்ளது. கிரண் ஒளிப்பதிவு ஊட்டியின் அழகையும் நள்ளிரவின் குளுமையையும் அழகாக படமாக்கியிருக்கிறார். இரவில் அதிகமாக எடுக்கப்பட்டிருப்பதால் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.
ஒரு நள்ளிரவில் நடக்கும் கதையை சஸ்பென்ஸ் திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறார் இயக்குனர் நரசிம்மன் பக்கிரி சாமி படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எதிர்பார்ப்போடு கதையை நகர்த்தி செல்கிறார் . பெரிய முதலீட்டு படத்திலேயே மிகப்பெரிய குறைகள் இருக்கத்தான் செய்கின்றன இந்த படத்திலும் ஒரு சில குறைகள் இருக்கிறது. அந்த குறைகளை தவிர்த்து பார்த்தால் ஆபாச காட்சிகளோ இரட்டை அர்த்த வசனம் இல்லாதது ப்ளஸ்.
மொத்தத்தில் ’ஹெச்.எம்.எம்’ (HMM – Hug Me More) – முழு நீள சஸ்பென்ஸ் திரைப்படம்.
மதிப்பீடு : 2.5 / 5
நடிகர்கள் : நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக்
பின்னணி இசை :: புரூஷ்
இயக்கம் : நரசிம்மன் பக்கிரி சாமி
மக்கள் தொடர்பு : வெங்கட்
Leave a Reply