சென்னை,செப்டம்பர் 30, 2024: காலநிலை ஆபத்து என்ற அவசரப் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்து வெளிப்படுத்தும் பரதநாட்டியத் தொடரான இக்ஷனாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை பிரீமியர் செப்டம்பர் 29, 2024 அன்று மதிப்புமிக்க ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது. பூர்ணம் ஈகோவிஷன் அறக்கட்டளையுடன் இணைந்து எச்.சி.எல் கான்செர்ட்ஸ் வழங்கிய இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய நடனத்தின் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு பெரிய ஆரவாரமான கைதட்டலைப் பெற்றது.
புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் தான்யா சக்சேனா இயக்கியுள்ள இக்ஷனா, இயற்கையுடனான மனிதகுலத்தின் அதிகரித்துவரும் மற்றும் நிறைந்த அளவிலான உறவை ஆராயும் ஒரு உணர்ச்சிகரமான மூன்று-பகுதியாக வெளிப்படுத்திய பரதநாட்டியமாகும். முதல் பகுதியில் மனிதகுலத்தின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சியையும் உலகத்துடனான அதன் இணக்கமான தொடர்பையும் சித்தரிக்கிறது, இரண்டாவது பகுதியானது மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பேரழிவு தரும் சுற்றுச்சூழல் அழிவை சித்தரிக்கிறது. கடைசி பகுதியானது காலநிலை பிரச்சனையானது தற்போதுள்ள மக்கள் மீது ஏற்படுத்தும் உளவியல்ரீதியான தாக்கத்தை முன்வைக்கிறது, இது பூமியின் எதிர்கால நிலை குறித்த ஒரு கசப்பான உண்மையை சித்தரிக்கிறது.
தமிழ், கொடவா, மராத்தி, ஜார்க்கண்டி, பெங்காலி, சமஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்த பரதநாட்டிய நிகழ்ச்சி தனித்துவமாக தெரிந்தது, இது கதைக்கு நல்ல ஆழத்தையும் பிராந்திய முக்கியத்துவத்தையும் கொடுத்தது. தான்யா சக்சேனா, ராம க்ஷிர்சாகர், அனகா ஹர்கரே, ரிதி போத்தார், நியதி விசால் மற்றும் சிருஷ்டி லோயா உள்ளிட்ட கலைஞர்களின் குழு, பரதநாட்டியத்தைப் பயன்படுத்தி ஒரு அவசர செய்தியை துல்லியமாகவும் அருமையாகவும் நளினத்துடனும் தெரிவிக்க, அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சென்னையில் இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்துவது குறித்து தான்யா சக்சேனா கூறியதாவது, “சென்னையின் கலாச்சார பாரம்பரியம் பரதநாட்டியத்துடன் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது, மேலும் இங்கு நிகழ்ச்சியை நடத்துவது ஒரு கவுரவமாகப். பார்க்கிறோம் நாங்கள் எதிர்பார்த்தைவிட பார்வையாளர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன் தனித்துவமான செழுமையான கலாச்சாரத்துடன் இக்ஷனாவை சென்னையில் நடத்தியது இந்த நிகழ்ச்சியை குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கியது.
எச்.சி.எல் கான்செர்ட்ஸ் தலைவர் அன்சுல் அதிகாரி கூறியதாவது, “எச்.சி.எல் கான்செர்ட்ஸில், எங்கள் நோக்கம் இந்தியாவின் பாரம்பரிய கலைகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிப்பது மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் பற்றி பேசுவதற்கு இந்தக் கலையைப் பயன்படுத்தி பயனுள்ளதாக மாற்றுவதும் ஆகும். சென்னையின் பார்வையாளர்கள் பரதநாட்டியத்தை வெகுவாக பாராட்டுகின்றனர், மேலும் அவர்கள் இக்ஷனாவை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது எங்களை உற்சாகப்படுத்துகிறது. காலநிலை ஆபத்து போன்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சக்தி பாரம்பரிய நடனத்திற்கு உள்ளது என்பதை இந்த நிகழ்ச்சி நிரூபிக்கிறது, மேலும் இந்தியா முழுவதும் இதுமாதிரியான நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஆதரிப்பதில் நாங்கள் பெருமையாக உணர்கிறோம்.
Leave a Reply