ஶ்ரீ சித்ரா பௌர்ணமி ஃபிலிம் சார்பில்  வி.மணிபாய் தயாரிப்பில் சகாயநாதன் இயக்கத்தில் டாக்டர் டிட்டோ, மகேஷ், தீப்ஷிகா, சிம்ரன், சாம்ஸ், மதுமிதா, திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் நடிப்பில் அக்.4 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘செல்ல குட்டி’

1998 ஆண்டு நடக்கும் கதை கடலூர் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் மகேஷ் பெற்றோரை இழந்தவர் தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் பள்ளியில் படித்து வரும் மகேஷ் படிப்பில் சிறந்த மாணவனாக இருக்கிறார். இவரது பகுப்பில் படிக்கும் நாயகன் டிட்டோ, , நாயகி  தீப்ஷிகா இவர்கள் அனைவரும் நட்பாக பழகி வருகினார்கள்.

ஒரு கட்டத்தில் தீபிக்‌ஷாவை  மகேஷ்  காதலிக்க  தீபிக்‌ஷா டிட்டோவை ஒரு தலையாக காதலிக்கிறார். மகேஷ் தீபிக்‌ஷாவிடம் தனது காதலை சொல்ல, அதை அவர் நிராகரித்து விடுகிறார். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத  மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து  வாழ்க்கையை தொலைக்கிறார்.

தீபிக்‌ஷா , டிட்டோ இருவரும் பள்ளியில் தேர்ச்சி பெற்று பொறியியல் கல்லூரியில் ஒன்றாக சேர்ந்து படித்து பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறுகினார்கள். இந்நிலையில்  தீபிக்‌ஷாவை  டிட்டோவிற்கு  திருமண செய்து வைக்க இரு குடும்பத்தாரும் முடிவு செய்கிறார்கள்.

இதற்கிடையே ,நண்பன் மகேஷ் காதலித்த பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம், என்று கருதும் டிட்டோ தீபிக்‌ஷாவை திருமணம் செய்ய மறுக்கிறார்…இதனையடுத்து  தீபிக்‌ஷா பெற்றோர்கள் வேறொருவருக்கு  திருமணம் செய்து வைக்க  ஒரு கட்டத்தில் சாலை விபத்தில் தீபிக்‌ஷா கணவர் மரணமடைகிறார். இறுதியில்  தீபிக்‌ஷா கணவர் மரணத்திற்கு காரணம் யார்? என்பதே ‘செல்ல குட்டி’  படத்தின்  மீதிக்கதை.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும்  டாக்டர் டிட்டோ இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மற்றோரு நாயகனான நடித்திருக்கும் மகேஷ் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார்  இருவரும் பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, என வெவ்வேறு காலகட்டத்த்திற்கு ஏற்றவாறு தோற்றம் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கினார்கள்.

செந்தாமரை நடித்திருக்கும் தீபிக்‌ஷா  அழுத்தமான கதாபாத்த்திரத்தில்  நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். பள்ளிப் பருவம் கல்லூரி பருவம் திருமணம் கர்ப்பிணி என அனைத்தையும் அழகாக  வெளிப்படுத்தியிருக்கினார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குறைவான காட்சிகள் என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.

டி.எஸ்.முரளிதரனின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமை சிற்பியின் பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

90 கால் காலத்தில்  நடக்கிற முக்கோண காதல் கதையை மையாக வைத்து திரைப்படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குனர் சகாயநாதன்,அழகான காதல் கதையோடு சமூக கருத்தையம் சொல்லியிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  ‘செல்ல குட்டி’  முக்கோண காதல்

மதிப்பீடு : 2.5 / 5

நடிகர்கள்: டாக்டர் டிட்டோ, மகேஷ், தீப்ஷிகா, சிம்ரன், சாம்ஸ், மதுமிதா, திடியன், சாப்ளின் சுந்தர்,

இசை : டி.எஸ்.முரளிதரன்

இயக்கம் : சகாயநாதன்

மக்கள் தொடர்பு : கார்த்திக்

Leave a Reply

Your email address will not be published.