பிரபல ரவுடி மற்றும் கொலையாரனாக இருக்கும் தர்மாவை என்கவுன்டர் செய்ய உத்தரவு போடுகிறார் போலீஸ் கமிஷனர் பி.எல்..தேனப்பன் தர்மாவை காட்டு பகுதியில் அழைத்து சென்று என்கவுன்டர் செய்யும் வேலையில் 5 போலீசை கொலை செய்து விட்டு தலைமறைவாகி விடுகிறான் தர்மா
VIDEO
சென்னையில் கூலி வேலை செய்து வரும் வசீகரன் மனைவி இழந்தவர் மகன் அப்புவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகினார் .6 ஆம் வகுப்பு படிக்கும் அப்புவை ஆங்கில மீடியத்தில் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார்.சிறுக சிறுக சேமித்த பணத்தை பிரியங்காவிடம் ஏலசீ ட்டுக ட்டி வரும் வசீகரன் சொந்தமாக கடை ஒன்றை நடத்த முயற்சியில் இருக்கிறார். ஒருநாள் வசீகரன் சாலையில் சென்று கொண்டிருக்க மாஞ்சா போட்ட காத்தாடி நூல் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறார். ஏலச்சீட்டு பிரியங்கா மற்றும் ஒருசில நண்பர்கள் செய்த துரோகத்தால் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை சிறுவன் அப்புவிற்கு ஏற்படுகிறது. மறுபக்கம் நாயகன் வினோத் நன்றாக படித்துவிட்டு வேலைக்கு செல்ல நாயகி ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒருநாள் நாயகியை பார்க்க அவரது அப்பா மற்றும் மாமா சத்யா வருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகி பிரியா மற்றும் அவ்ரது அப்பா கொலை செய்யப்படுகிரார்கள். இதனையடுத்து அந்த வீண் பழி வினோத் மீது விழ சிறைக்கு சென்று விடுகிறார். ஒரு கட்டத்தில் வினோத் – அப்பு இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இறுதியில் அப்பு தொலைத்த பள்ளி படிப்பை தொடர முடிந்ததா? இல்லையா? நாயகன் வினோத் மீண்டும் திருமண வாழ்க்கை கை கூடியதா? இல்லையா? ரவுடி தர்மாவை போலீஸ் என்கவுன்டர் செய்தார்களா? இல்லையா? என்பதே ‘ அப்பு VI-STD படத்தின் மீதிக்கதை. சபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கல்லூரி வினோத் இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த படத்தில் கதாநாயகனாக முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வினோத்திற்கு ஜோடியாக வரும் நாயகி பிரியா படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார். அப்பு கதாபத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவன் பிரபாகர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முழுப்படத்தையும் தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். அப்புவின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குனர் வசீகரன் பாலாஜி அந்த கதாபாத்திரமாகவே நம் கண்முன் வந்து நிற்கிறார். மூன்று மனிதர்களின் கதையை மையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வசீகரன் பாலாஜி சூழ்நிலை எப்படியெல்லாம் மனிதர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. என்பதை அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.மாணவர்களுக்கு கவ்வி எவ்வளவு முக்கியம் எனப்தையும் காத்தாடி நூலால் எப்படி உயிர் இழப்பை ஏற்படுகிது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு வாழ்ந்துக்கள். மொத்தத்தில் அப்பு VI-STD ’ – கல்வியின் அவசியம் மதிப்பீடு : 3/ 5 நடிகர்கள் : வினோத், பிரியா, டார்லிங் மதன், பி.எல்..தேனப்பன்,வேலு பிரபாகரன், பிரியங்கா ரோபோஷங்கர், விஜய் சத்யா, இசை : ஆலன் விஜய் இயக்கம் : வசீகரன் பாலாஜி மக்கள் தொடர்பு : கார்த்திக்
Leave a Reply