ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், ரகுமான், அதர்வா, துஷ்யந்த், அம்மு அபிராமி, ஜான் விஜய், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிறங்கள் மூன்று’
VIDEO
பள்ளி மாணவனான துஷ்யந்த் டியூசனுக்கு சென்று வரும் போது ஒரு காரில் நான்கு பேர் ஒரு பெண்ணை கடத்தி செல்கிறார்கள். இதை நேரில் பார்க்கும் துஷ்யந்த் பயந்து வீட்டிற்கு ஓடி விடுகிறார். இதே நேரம் தனது பள்ளி ஆசிரியரான ரகுமான் மகலான அம்மு அபிராமி காணாமல் போகிறார். இன்ஸ்பெக்ட்டர் சரத்குமார் மகனான அதர்வா இயக்குனராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தன் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார் மறுபுறம் பிரபல இயக்குனரான ஜான் விஜய் அதர்வா கதையை ஆட்களை வைத்து திருடி சென்று விடுகிறார். இந்நிலையில் ஆசிரியரான ரகுமான் தனது மகள் அம்மு அபிராமி காணவில்லை என்று காவல் நிலையம் சென்று புகார் அளிக்கிறார் இறுதியில் காணாமல் போன அம்மு அபிராமி கிடைத்தாரா? இல்லையா? காணாமல் போன அதர்வாவின் கதை கிடைத்தன? இல்லையா? எனபதே ’நிறங்கள் மூன்று’ படத்தின் மீதிக்கதை. இயக்குனராக நடித்திருக்கும் அதர்வா துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்ட்டர் கதாபத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார் கம்பீரமான தோற்றதத்தில் நடித்திருக்கிறார். ஆசிரியராக வரும் ரகுமான், பள்ளி மாணவராக வரும் துஷ்யந்த், மாணவியாக வரும் அம்மு அபிராமி, டீக்கடைக்காரராக வரும் சின்னி ஜெயந்த், ஜான் விஜய் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள். இசை அமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜோய் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்க்கிறது. டிஜோ ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை பெற்ற கார்த்திக் நரேன் மூன்று கதைகளை மையமாக வைத்து ஒரு வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் அதர்வா போதை பொருள் எடுத்துக் கொள்வைத்து போன்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் ’நிறங்கள் மூன்று’ முடிவு ஒன்று மதிப்பீடு : 3/5 நடிகர்கள் : சரத்குமார், ரகுமான், அதர்வா, துஷ்யந்த், அம்மு அபிராமி, ஜான் விஜய், சின்னி ஜெயந்த் இசை : ஜேக்ஸ் பிஜோய் இயக்கம் : கார்த்திக் நரேன் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply