சூரிய நாராயணா தயாரிப்பில் இயக்குநர் எம்.உதய்குமார் இயக்கத்தில் ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், சார்லி, அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ள ’லைன்மேன்’ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் வாரிய நிலையத்தில் லைன்மேனாக சார்லி வேலை பார்த்து வருகிறார் சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி மின் பொறியியல் பட்டதாரி தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார்.
அந்த பகுதி மக்களுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுக்கிறார். தெரு விளக்குகள் இரவில் தானாக எறிவதற்கும், காலையில் தானாகவே அனைவதற்கும் ஏற்றார் போல ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார்.
இதனை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். இருப்பினும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இறுதியில் ஜெகன் பாலாஜியின் கண்டுபிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கியதா? இல்லையா? என்பதே ’லைன்மேன்’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்பது போல இல்லாமல் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது கண்டுபிடிப்பிற்கு அகீகாரம் கிடைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார். மகனின் முயற்சிக்கு துணை நிற்கிறார் நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், நடிப்பு இயல்பாக உள்ளது சிறப்பு தோற்றதத்தில் வரும் அதிதி குறைவான காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்.
தீபக் நந்தகுமார் இசையில் பாடல்கள் கவனம் பெறுகிறது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவு தூத்துக்குடி உப்பளங்களையும் அங்கு வசிக்கும் மக்கள் வாழ்க்கையையும் கண் முன்னே காட்டியிருக்கிறார்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.உதய்குமார் எளிய மனிதர்களின் அரிய கண்டுபிடிப்புகளால் அரசுக்கும் மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’லைன்மேன்’ – புதிய கண்டுபிடிப்பு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், சார்லி, அதிதி பாலன்
இசை : தீபக் நந்தகுமார்
இயக்கம் : எம்.உதய்குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்
Leave a Reply