ட்ரான்ஸ் இந்தியா மீடியா – புனிதா ராஜன், ராஜேந்திர எம்.ராஜன் தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா, அபிராமி, மடோனா செபாஸ்டின், மதுசூதன ராவ், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஜாலியோ ஜிம்கானா’
சென்னையில் ஹோட்டல் தொழிலை நடத்தி வருபவர் ஒய்ஜி மகேந்திரன். இவருடைய மகள் அபிராமி இவருக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவர் தான் மடோனா செபஸ்டின்,அபிராமி பார்கவன், மரியா ஆகியோர் இருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒய்ஜி நடத்தி வந்த ஹோட்டலில் பெரிய ஆர்டர் கொடுத்து பணம் செலுத்தாமல் ஏமாற்றும் எம்எல்ஏ மதுசூதனனின் செயலால் பெரும் சிக்கலுக்குள்ளாகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பொதுநல வழக்கறிஞர் பிரபு தேவாவை சந்திக்க தனது மூன்று பெண்களுடன் அபிராமி செல்கிறார்.
பிரபு தேவா தங்கியிருக்கும் ஓட்டல் அறையின் கதவு திறந்திருக்க, அபிராமி மற்றும் அவர்களது மகள்கள் உள்ளே சென்று பார்க்கும் போது பிரபு தேவா பிணமாக இருக்கிறார்.
இந்த கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடுமோ என்ற பயத்தில் ,அவரது உடலை யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்க, அதற்குள் பிரபு தேவாவின் வங்கி கணக்கில் ரூ.10 கோடி இருக்கும் தகவல் நான்கு பெண்களுக்கு தெரிய வருகிறது.
இதனையடுத்து அபிராமி குடும்பத்தினர் வங்கி கணக்கில் இருக்கும் ரூ.10 கோடி அடைய நினைக்கிறார்கள். இறுதியில் அபிராமி குடும்பத்திற்கு அந்த ரூ.10 கோடி ரூபாய் கிடைத்ததா? இல்லையா? பிரபு தேவாவை கொலை செய்த யார்? என்பதே ’ஜாலியோ ஜிம்கானா’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக வரும் பிரபுதேவா படம் முழுவதும் பிணமாக நடித்திருக்கிறார். சில காட்சிகள் மற்றும் பாடல்களைத் தவிர்த்து, படத்தின் பெரும்பாலான இடங்களில் ‘நடைப்பிணமாக’ நடித்திருக்கிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் அபிராமி மற்றும் மூத்த மகளாக மடோனா செபாஸ்டியன் நடிப்பு ரசிக்க முடிகிறது. சில காட்சிகளில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். மடோனாவின் தங்கைகளாக அபிராமி மற்றும் மரியா நடிக்கின்றனர்,
யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ், சாய் தினா, ரோபோ சங்கர், கதிர், ஜான் விஜய், கல்லூரி வினோத், ஒய்.ஜி.மகேந்திரன், சாம்ஸ் மற்றும் இயக்குநர் சக்தி , நிர்வாக தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ஜெகன் கவிராஜ் என் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
அஷ்வின் விநாயகமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் aட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் பாபு காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம் கதையில் கொஞ்ச்ம கவனம் செலுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் ’ஜாலியோ ஜிம்கானா’ – பிணத்துடன் பணத்தை தேடி
மதிப்பீடு : 2.5/5
நடிகர்கள் : பிரபு தேவா, அபிராமி, மடோனா செபாஸ்டின், மதுசூதன ராவ், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன்,
இசை : அஷ்வின் விநாயகமூர்த்தி
இயக்கம் : சக்தி சிதம்பரம்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்
Leave a Reply