”ஸ்கை வாண்டர்ஸ்” எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜெயலட்சுமி இயக்கத்தில் லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ’என் காதலே’

பெற்றோர்களை இழந்த மீனவனான நாயகன் லிங்கேஷ் தாய்மாமா மதுசூதனின் வளர்ப்பில் வளர்கிறார். தனது மாமனுக்கு ஏதாவது ஒன்றென்றால் முதல் ஆளாய் நிற்பவர் லிங்கேஷ்

மதுசூதனின் மகளாக வரும் திவ்யா தனது  மாமா லிங்கேஷ் மீது உயிரே வைத்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள நாயகி லியா மற்றும் குழுவினர் வருகிறார்கள்.

ஊரை சுற்றி காண்பித்து தமிழர்களின் அருமை பெருமைகளை கூறி வருகிறார் லிங்கேஷ். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மலர்கிறது. ஒரு கட்டத்தில் லியா – லிங்கேஷின் காதல் திவ்யாவிற்கு தெரிய வருகிறது.

இறுதியில்   லிங்கேஷ் – லியா திருமனம் நடந்தா? இல்லையா? திவ்யா லிங்கேஸை  திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பதே ’என் காதலே’ படத்தின்  மீதிக்கதை.

மீனவ கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் நாயகன் லிங்கேஷ் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  தனது  மாமன் மகளை தாய் போல பார்ப்பதால் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கோரும் இடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். லிங்கேஷுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும்.

நாயகிகளாக வரும் திவ்யா , லியா இருவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு  கொடுத்த வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.

தாய்மாமாவாக வரும் மதுசூதனன், கஞ்சா கருப்பு மற்றும் மாறன் இவர்களின் கூட்டணியில் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. படத்தில் மற்ற வேடங்களில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

சாண்டி சாண்டல்லோ இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு கூடுதல்  பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

முக்கோண காதல் கதையை அடிப்படையாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி இத்திரைப்படத்தில்  காதல், தமிழ்நாட்டு கலாச்சாரம் குடும்ப உறவுகள் ஆகியவற்றை அழகாக கையாண்டு இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்  ’என் காதலே’ – காதல் அழிவதில்லை

மதிப்பீடு : 3/5

நடிகர்கள் : லிங்கேஷ், திவ்யா தாமஸ், லியா, காட்பாடி ராஜன், மாறன், கஞ்சா கருப்பு, மதுசூதனன், தர்ஷன்
இசை : சாண்டி சாண்டல்லோ
இயக்கம் : ஜெயலட்சுமி
மக்கள் தொடர்பு : வேலு

Leave a Reply

Your email address will not be published.