ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரிப்பில் பிரபதீஷ் சாம்ஸ் இயக்கத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சாந்தினி, ஹரீஷ் பெராடி, செண்ட்றாயன், பூஜா சங்கர், வேலு பிரபாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கஜானா’
நாகமலை என்ற கட்டுப் பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதையல் இருந்த்தாகவும் அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அந்த புதையலை தேடித் செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.
ஒருபக்கம் நாயகன் இனிகோ பிரபாகர் தனது குழுவினருடன் நாகமலைக்கு செல்கிறார். மறுபக்கம், அதே புதையலை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஆராய்ச்சியாளரான வேதிகாவும் ஈடுபடுகிறார் இதே வேளையில் கருட இனத்தை சேர்ந்த ஷாந்தினியும் புதையலை கைப்பற்றும் முயற்சியில் இறங்குகிறார்.
இறுதியில் புதையல் ஒன்று இருப்பது உண்மைதானா.? அந்த புதையலை கைப்பற்றியது யார்? இவர்கள் அனைவரும் உயிருடன் காட்டை விட்டு வெளியே சென்றார்களா? இல்லையா? என்பதே ‘கஜானா’ படத்தின் மீதிக்கதை.
கதைநாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் எதார்த்த நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். நடை,பேச்சு, சண்டை என அணைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆராய்ச்சியாளராக வரும் வேதிகா மூலமாக கதை விரிவடைந்தாலும், அவருக்கு இதில் முதல் பாதியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு காட்சிகள் இல்லை . வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தடியிருக்கிறார் சாந்தினி
யோகிபாபு, நான்கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கிறது. பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் ஆகியோரது அனுபவமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதையோடு பயணிக்கிறது. கோபி துரைசாமி மற்றும் வினோத்.ஜே.பி ஒளிப்பதிவு பிரமாண்டமாக இருக்கிறது.
ஒரு கற்பனை கதையை ஃபேண்டஸி, அட்வெஞ்சர், அனிமேஷன் ஆகியவற்றை கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரபதீஷ் சாம்ஸ் கற்பனைக்கு எட்டாத ஒன்றை கண் முன் கொண்டு வந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘கஜானா’ – கோடை கொண்டாட்டம்
மதிப்பீடு : 3/5
நடிகர்கள்: வேதிகா, இனிகோ பிரபாகர், பிரதாப் போத்தன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், சாந்தினி, ஹரீஷ் பெராடி, செண்ட்றாயன், பூஜா சங்கர், வேலு பிரபாகரன்
இசை: அச்சு ராஜாமணி.
இயக்கம் & தயாரிப்பு : பிரபதீஷ் சாம்ஸ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சுகு & தர்மதுரை
Leave a Reply