கந்தர்வா செல்லுலாய்ட்ஸ் கிரியேட்டர்ஸ் சார்பில் கிருத்திகா காந்தி தயாரிப்பில் ஆர். கே. திவாகர்  இயக்கத்தில் மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ், கண்ணதாசன், ராஜேஷ் கோபிஷெட்டி, மாஸ்டர் சிவ சுகுந்த், சுந்தர் அண்ணாமலை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கீனோ’

மகாதாரா பகவத் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி  ரேணு சதிஷ் இவர்களுக்கு 15 வயது  மகன் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்நிலையில் ரேணுகாவிற்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க அங்கு சென்றுவிடுகிறார்.

ஒரு நாள் இரவில் மாஸ்டர் கந்தர்வா மாடிக்கு  செல்ல அங்கு  வரும் கீனோ என்ற மர்மமான உருவம் தன்னுடன் வருமாறு சிறுவனை அலைகிறது. ஒரு கட்டத்தில் இது தந்தைக்கு தெரிய வர அவர் ஆன்மீக சக்திகளின் உதவி கொண்டு மகனை தீய சக்தி ஏதாவது தொந்தரவு செய்கிறதா என்று சோதிக்கிறார். அப்படி எதுவும் இல்லை.  என்று தெரிய வருகிறது.

இறுதியில்   கீனோ என்பது யார்?  தந்தை மகனை கீனோவிதம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே ’கீனோ’  படைத்ததின்  மீதிக்கதை.

மகாதாரா பகவத், ரேணு சதீஷ், காந்தர்வா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை கவர்கிறார்கள். கீனோ கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர் ஆர். கே. திவாகர்  படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

ஆர். கே. திவாகர்  இசையில் பாடல் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. ஆலிவர் டேனியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதையை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர். கே. திவாகர் இதுவரை எத்தனையோ விதமான சைக்காலஜிக்கல் திரில்லர் படம் வந்திருந்தாலும், இந்த படம் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

மொத்தத்தில் ’கீனோ’ – பயம்

மதிப்பீடு : 3/5

நடிகர்கள் : மகாதாரா பகவத், மாஸ்டர் கந்தர்வா, ரேணுகா சதீஷ்,
இசை : ஆர். கே. திவாகர் 
இயக்கம் : ஆர். கே. திவாகர் 
மக்கள் தொடர்பு : பெருதுளசி பழனிவேல்

Leave a Reply

Your email address will not be published.