‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘#நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .

‘நேச்சுரல் ஸ்டார்’ நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ‘#நானிஓடேலா 2 ‘ அறிவிப்பு மூலம் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ‘தசரா’ படத்தின் மூலம் நூறு கோடிக்கு மேல் வசூலித்த வெற்றி கூட்டணியான நானி- ஓடேலா மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ‘தசரா’ படத்தை விட மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என உறுதியளிக்கும் வகையில் புதிய திரைப்படத்தில் இந்த இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

குறிப்பாக ‘தசரா படத்தினை விட நூறு மடங்கு அதிகமாக பார்வையாளர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் உருவாகும்’ என இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ‘#நானி ஓடேலா 2’ பற்றிய உற்சாகம் அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் படமாக்கப்பட்ட பிரத்யேக காணொளி மூலம்… திரைக்குப் பின்னால் பணியாற்றிய புகைப்படத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார். மேலும் தனித்துவமான மற்றும் அழுத்தமான படைப்பை வழங்குவதற்கான குழுவினரின் உறுதிபாட்டையும் வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா பேசுகையில், ” கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி ‘தசரா’ படத்தின் இறுதி காட்சி படமாக்கப்படும் போது காட்சி நிறைந்த உடன் ‘கட்’ என சொன்னேன். தற்போது மீண்டும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று மீண்டும் ‘ஆக்சன்’ என சொன்னேன். இதன் போது ‘#நானிஓடேலா 2’ படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான பிரத்யேக காணொளியை படமாக்கினோம்.‌ இதற்கு இடையில் 48, 470, 400 வினாடிகள் கடந்து விட்டது. ஒவ்வொரு வினாடியும் என்னுடைய அடுத்த படத்திற்கான அர்த்தமுள்ள உழைப்புக்காக செலவிடப்பட்டிருக்கிறது. எஸ் எல் பி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிப்பில் நானி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம், தசரா படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ‘ #நானிஓடேலா 2’ திரைப்படம் உருவாகும் என நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.

இது தொடர்பாக நானி பேசுகையில், ” இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் பைத்தியக்காரத்தனமான அன்பு என் வாழ்க்கையில் மீண்டும் வந்து விட்டது. இதனை கண்டு தரிசிக்க தயாராக இருங்கள்” என்றார்.

இவர்களின் இத்தகைய பேச்சு தனித்துவமான மற்றும் பரபரப்பான கதை அம்சத்தை சுட்டிக் காட்டுகிறது. இந்த திரைப்படத்தில் இதற்கு முன் ஏற்றியிராத கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய சினிமா அனுபவத்திற்கு ‘ #நானிஓடேலா 2’ களம் அமைக்கிறது .

எஸ். எல். வி. சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா இணைந்திருக்கும் இந்த திரைப்படம் அதிக பொருட்செலவில் உருவாகிறது.

Leave a Reply

Your email address will not be published.