ஜோதி சிவா தயாரிப்பில் சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மணி, ஜிவி அஹானா அஸ்னி, நிஹாரிகா, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்‌ஷரா, கவிதா ரவி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்   ‘நிழற்குடை’

ஈழத்தமிழரான தேவயானி போரில் தனது குடும்பத்தை பறிகொடுக்கிறார். இதனையடுத்து சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் வேலை பார்த்தது வருகிறார்.

மறுபுறம் ஐடி நிறுவனத்த்தில் வேலை பார்க்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை  சரியாக பார்த்ததுக்கு கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

இந்நிலையில் குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக தேவயானி இவர்கள் வீட்டிற்கு வருகிறார். குழந்தையை அன்புடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்கிறார். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் விஜித் – கண்மணி தம்பதிக்கு விசா கிடைத்துவிடுகிறது.

இதனையடுத்து  குழந்தையை பிரிய வேண்டுமே என்ற மன  வேதனையில் தேவயானி இருக்கிறார். இந்நிலையில் குழந்தை திடீரென்று காணாமல் போகிறது.  குழந்தையின் பெற்றோர், சிலர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள்.

இறுதியில் காணாமல் போன குழந்தை கிடைத்ததா ? இல்லையா? விஜித் – கண்மணி  இருவரும் அமெரிக்கா சென்றார்களா? இல்லையா? என்பதே ‘நிழற்குடை’  படத்தின்  மீதிக்கதை.

ஜோதி கதாபாத்திரத்தில்  நடித்திருக்கும் தேவயானி இயல்பான நடிப்பின் முலம் கவர்கிறார். குழந்தையிடம்   காட்டும் அன்பும், அக்கறையும் ,  பெற்றோர்களுக்கு கொடுக்கும் அறிவுரை என  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தம்பதிகளாக வரும்  விஜித் மற்றும் கண்மணி இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பு பார்ப்பதற்கு அழகு

ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன்  என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.  ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கிறது.

குழந்தைகளை பெற்றோர்கள் அக்கறையோடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக  வைத்து  திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர்  சிவா ஆறுமுகம் இத்திரைப்படத்தில் எந்த இடத்திலும் இரட்டை அர்த்தங்களோ ஆபாசமான காட்சிளோ இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் வகையில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில்   ‘நிழற்குடை’  – சமூக அக்கறை

மதிப்பீடு : 3.30/5

நடிகர்கள் : தேவயானி, விஜித், கண்மணி, ஜிவி அஹானா அஸ்னி, நிஹாரிகா, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா ராணி, தர்ஷன் சிவா, அக்‌ஷரா, கவிதா ரவி
இசை : நரேன் பாலகுமார்
இயக்கம் : சிவா ஆறுமுகம்
மக்கள் தொடர்பு : ஜான்

Leave a Reply

Your email address will not be published.