இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மகாசிவன் இயக்கத்தில் ஹரி சங்கர் மோனிகா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘தோழர் வெங்கடேசன்’.

காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சோடா கம்பெனி வைத்து நடத்தி வருபவர் ஹரி சங்கர்.அதே கிராமத்தில் இட்லி கடை வைத்திருக்கும் ஷர்மிளாவின் மகள் மோனிகா.

தாய் தந்தையை இழந்த வெங்கடேசன் தினமும் இரவு உணவுக்காக மோனிகாவின் கடையில் சாப்பிடுவது வழக்கம். வெங்கடேசன் மீது மோனிகாவின் அம்மாவிற்கு நல்ல மதிப்பு உண்டு. திடீரென் மோனிகாவின் அம்மா இறந்து விட தாயை இழந்த இளம் பெண்னை சொந்தம் கொண்டாடும் ஆணாதிக்கச் சமூகத்திடம் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார் மோனிகா. அவரை காப்பாற்றி “எப்படியும் சாகத்தான் போகிறாய், அதற்கு என்னுடனே இருந்து என் கடையில் வேலை பார். உனக்கு எப்போது என் மீது நம்பிக்கை வருகிறதோ அப்போது என்னை திருமணம் செய்துகொள் என்று” அழைத்துச்செல்கிறார் நாயகன்.

வெங்கடேசன் – மோனிகாவின் வாழ்க்கை எந்த வித பிரச்னையும் இல்லாமல் நகர்கிறது. இவர்களுடைக்கிடையே காதலும் வளர்கிறது. இந்நிலையில் திடீரென அரசு பேருந்தால் ஏற்படும் விபத்தில் வெங்கடேசன் தனது இரு கைகளை இழந்து விடுகிறார். அதன் பிறகு அவர்களது வாழ்கை தலைகீழாக மாறுகிறது. விபத்தில் கைகளை இழந்த வெங்கடேசன் நஷ்ட ஈடு கேட்டு வழக்காடு மன்றத்திற்கு செல்கிறார். அங்கு அரசாங்கம் வெங்கடேசனுக்கு 20 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்பு வழங்குகிறது. ஆனால் அதை அரசு கொடுக்க தாமதப்படுத்துகிறது. இதனால் அரசு போருந்து ஒன்றை நீதி மன்றம் வெங்கடேசனுக்கு ஜப்தி செய்து கொடுக்கிறது. அதன் பின் அரசு வெங்கடேசனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததா, வெங்கடேசனுக்கு ஜப்தி செய்து கொடுக்கப்பட்ட அரசு போருந்து என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஹரி சங்கர் சிறு நகர இளைஞனை அப்படியே தன்னுள் கொண்டு வந்திருக்கிறார். இரண்டு கைகளும் இல்லாமல் மிகவும் திறம்பட நடித்திருக்கிறார். நாம் படத்தில் பார்க்கும் பொழுது கதாபாத்திரம் மட்டுமே தெரிகிறது, ஹரி சங்கர் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி மோனிகா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் மோனிகா படம் முழுவதும் கவனம் பெறுகிறார். காதல், வலி, பிரிவு என அனைத்தையும் நம்முள் கடத்துகிறார். தனக்கு கொடுக்கப்பட்டிருப்பது வலுவான கதாபாத்திரம் என்பதை அறிந்தது தன்னுடைய நிதானமான நடிப்பில் நீங்கா இடம் பிடிக்கிறார்.

அரசு போக்குவரத்து போருந்துகளால் நடந்த விபத்துகளின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்காக தறவுகளைம் ஆதாரங்களையும் திரட்டி இருக்கிறார் இயக்குநர். அதே போன்று அரசு போக்குவரத்து விபத்துகளில் சிக்கி இன்றுவரை மீண்டு வர முடியாத எளிய மக்களின் வாழ்வியலை பதிவு செய்ததற்கு இயக்குநருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

நடிகர் நடிகையர் : ஹரிசங்கர் மோனிகா, தீரன், அரசன்
இசை:சகிஷ்ன
ஒளிப்பதிவு: வேதா செல்வம்
இயக்கம்: மகா சிவன்

Leave a Reply

Your email address will not be published.