அறிமுக நாயகன் ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமலி, பிரியங்கா, ரவி ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் ராஜா கஜினி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘உற்றான்’.

நாயகன் ரோஷன், கானா சுதாகர் இருவரும் தனது கல்லூரி பேராசிரியை பிரியங்கா,வீட்டில் தங்கி படித்து வருகிறார்கள். ரோஷன் உதயகுமார், கானா சுதாகர் இருவரையும் பிரியங்கா தனது மகன்கள் போல பாதுகாத்து வளர்க்கிறார்.

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் நாயகன், கல்லூரி மாணவர் தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெறுகிறார். இதனால் ஏற்படும் பகையில், ரோஷனுக்கு எதிரிகள் முளைக்கிறார்கள். ஊர் பெரிய மனிதராக வரும் வேல.ராமமூர்த்திக்கு ரோஷனை பிடிக்காமல் போகிறது. அந்த பகுதியில் பெரிய ஆளாக வலம் வரும் ரவிஷங்கர் ரோஷனை பாதுகாக்கிறார்.

இதற்கிடையே ரோஷன் படிக்கும் கல்லூரியை இருபாலருக்குமான கல்லூரியாக மாற்றுகிறார்கள். அங்கு படிக்க வரும் நாயகி ஹிரோஷினி மீது ரோஷன் காதல் வயப்படுகிறார். ஹிரோஷினியின் இன்ஸ்பெக்டர் அப்பா மதுசூதனன் இதனை எதிர்க்கிறார்.இதனிடையே ஒரு தகராறில் ஹிரோஷினியை ரோஷன் தாக்கி காயப்படுத்தியதால் ரோஷன் கைதாகி, ஜாமீனில் வருகிறார். ஹிரோஷினியும் அதை உண்மை என்று நம்புகிறார்.

ஒரு கட்டத்தில் பிரியங்காவால், ரோஷன் எப்படிப்பட்டவர் என்ற உண்மை தெரிய வர ஹிரோஷினி மனம் மாறி ரோஷனை ஏற்கத் தயாராகிறார். இதன் பின் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிமுக நாயகன் ரோஷன் உதயகுமார் தமிழுக்கு நல்ல அறிமுகம். டான்ஸ், சண்டை, காதல் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு படத்துக்கு நாயகி எந்த அளவுக்கு முக்கியமோ அதுவும் காதல் படத்துக்கு நாயகி தான் மிக முக்கியம் அதை திறம் படசெய்துள்ளர் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் பிரியங்கா படத்துக்கு மிக பெரிய பலமாக உள்ளார் தாதாவாக வரும் ரவி ஷங்கர் கதாபாத்திரத்தை புரிந்து அந்த பாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார் என்று சொன்னால் மிகையாகது.

மதுசூதனராவ், வேலராமமூர்த்தி, சுலக்ஷனா, இமான் அண்ணாச்சி என்று அறிந்த முகங்கள் அவரவர் வேலையை சரியாகப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

கல்லூரியை கதை களமாக வைத்து காதலால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ராஜா கஜினி சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக படத்தை கொண்டு போனவர், இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘உற்றான்’ உண்மை காதலை சொல்லும் படம்.

நடிகர்கள் ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி, பிரியங்கா,
இசை என்.ஆர்.ரகுநந்தன்
இயக்கம் ராஜாகஜினி
மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது

Leave a Reply

Your email address will not be published.