சௌடேஷ்வரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.இருதயராஜ் தயாரித்துள்ள படம் எப்போ கல்யாணம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காக எவ்வளவோ
கஷ்டங்களைத்தாங்கிக்கொண்டு தங்கள் பிள்ளைகளைப்படிக்க வைக்க கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் அந்த மாணவ, மாணவிகள் காதல் என்ற பெயரால் இளம் வயதிலேயே பாதை மாறி தங்கள் வாழ்க்கையை எப்படிக் கெடுத்துக்கொள்கிறார்கள் இதில் இருந்து மீள்வது எப்படி என்ற கருத்தை வைத்து கலகலப்பாகவும் சமூக சிந்தனையுடனும், உருவாகியுள்ள படமே “எப்போ கல்யாணம்
இப்படத்தில் லிவிங்ஸ்டன், மகாநதிசங்கர், ரமாபிரபா, வினய்பிரசாத், புதுமுகங்கள் விஸ்வநாத் ரஞ்சித், ரகு, சீயான் விக்ரமின் தம்பி அரவிந்த் விக்ரம் சிறப்புத்தோற்றத்திலும் அறிமுகமாகிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் சிசிலியாராஜ்.
இசை – கிருஷ்ணகுமார்
எடிட்டிங் – சிவக்குமார்
சண்டை – குங்பூசந்துரு
நடனம் – மூர்த்தி மைசூர் ரஞ்சித்குமார்
பாடல்கள் – டாக்டர் கிருதியா
தயாரிப்பு மேற்பார்வை -ஜி.ஏகாம்பரம்
இணை இயக்கம் ஆர்.கே. வேல்ராஜ்
பாடகர்கள் – கார்த்திக், ஜி.தமிழ் வர்ஷா, ஸ்ரீஅபிஜித் ஆகியோர் பாடியுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் மேலகோட்டை, கோலார், பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பும் பாடல் காட்சிகளும் நடந்து கொண்டிருக்கும் “எப்போ கல்யாணம்” படம் விரைவில் திரைக்கு வருகிறது.
V.M. ஆறுமுகம்
9092096558
Leave a Reply