ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், டிஆர்ஏ ஹோம்ஸ் தனது வருடாந்திர வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியான ‘ஜாய்பெஸ்ட் 2026’ கொண்டாட்டத்தை சென்னை வொண்டர்லாவில் நடத்தியது. இதில் 350 குடும்பங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட டிஆர்ஏ குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட இந்த கேளிக்கைப் பூங்காவில், அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு இந்த நாளை மறக்க முடியாத இனிய அனுபவமிக்க நாளாக மாற்றினர்.
தமிழகத்தில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு கேளிக்கைப் பூங்காவில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இங்கு குடும்பத்தினருக்கான பிரத்யேக விளையாட்டுக்கள், இசை, நடனம் மற்றும் மதிய உணவு என அனைத்தும் நாள் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வீடு வாங்கிய பின்னரும் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை தொடர்ந்து பேணும் வகையி இந்த நிகழ்ச்சியை டிஆர்ஏ ஹோம்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.
இது குறித்து டிஆர்ஏ ஹோம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களே எங்களுக்கு மிகவும் முக்கியம். அந்த வகையில், எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்கள் பயணத்தில் பங்குபெறும் குடும்பங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியை நாங்கள் நடத்தினோம். ‘ஹோம் ஆப் பிரைட்’ என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல, வீடு ஒப்படைத்த பிறகும் தொடரும் உறவின் அடையாளம் ஆகும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஒவ்வொரு டிஆர்ஏ குடும்பத்துடனும் எங்களுக்கான உறவை நாங்கள் மேலும் ஆழப்படுத்த விரும்புகிறோம். கடந்த காலங்களில் நாங்கள் நடத்திய ‘புத்தாண்டு திருவிழா 2024’ மற்றும் ‘தைத் திருவிழா 2023’ போன்ற நிகழ்ச்சிகள் வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்பை உருவாக்க உதவியுள்ளன. ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட கால உறவும், சமூகத்தை உருவாக்குவதும் மிக அவசியம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், என்று தெரிவித்தார்.
டிஆர்ஏ ஹோம்ஸ் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் மனோஜ் வாசுதேவன் கூறுகையில், சமூகத்துடனான நல்லுறவு என்பது ஒரு தொடர்ச்சியான பயணம் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த ‘ஜாய்பெஸ்ட் 2026’ நடத்தப்பட்டது. இதுபோன்று நிகழ்ச்சிகள் மூலம், வாடிக்கையாளர்களுடன் நீண்ட கால உறவுகளை வளர்க்கவும், நம்பிக்கையை வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு டிஆர்ஏ குடும்பமும் வீட்டில் குடியேறிய பிறகும், நீண்ட காலத்திற்கு எங்களுடன் இணைந்திருப்பதை இது உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மக்களை ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியானது, வீட்டு உரிமையாளர்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க டிஆர்ஏ ஹோம்ஸ் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இந்நிறுவனம், வாடிக்கையாளர்களை வெறும் வீடு வாங்குபவர்களாக மட்டும் பார்க்காமல், தங்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் நிறுவனத்தின் கொள்கைக்கு ஏற்ப இந்த கொண்டாட்டம் அமைந்தது.
“ஹோம் ஆப் பிரைட்” என்ற தங்களின் தாரக மந்திரத்திற்கு ஏற்ப, நாங்கள் வெறும் கட்டிடங்களை மட்டும் கட்டுவதில்லை; நிலையான உறவுகளையும் உருவாக்குகிறோம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.