லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் “லாக் டவுன்”
வட சென்னையில் வசிக்கும் சார்லி , நிரோஷா தம்பதிகளின் மூத்தமகள் அனுபமா பட்டப்படிப்பை முடித்து விட்டு ஐடி நிறுவனத்தில் வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் ராஜ்குமார் நாயகி அனுபமாவை ஒரு தலையாக காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் ராஜ்குமார் தன் காதலை அனுபமாவிடம் கூற அதை ஏற்க மறுக்கிறார் இந்நிலையில் வேலை வாங்கி தருவதாக கூறி தோழி ஒருவர் அனுபமாவை பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு மது குடித்துவிட்டு ஆட்டம், பாட்டு என்று சந்தோஷமாக இருக்க போதை அதிகமாக அனுபமா மயங்கி கீழே விழ அவரை ஒரு அறையில் அவரது தோழி படுக்க வைக்கிறார்
மறுநாள் வீட்டிற்கு செல்ல சில மாதங்களில் அனுபமா கர்ப்பமாக இருப்பது தெரிய வர அதிர்ச்சி அடைகிறார். தன்னை யார் பலாத்காரம் செய்தார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். தன் வீட்டுக்கு தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க நினைக்கிறார்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. இறுதியில் அனுபமா தன் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? கருவை கலைத்தாரா ? இல்லையா? எனபதே “லாக் டவுன்” படத்தில் மீதிக்கதை.
கதாநாயகியாக நடித்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். வேலை தேடுவது, குடும்ப பாசம் , பணத்திற்க்காக எடுக்கும் முயற்சி, என அனைத்திலும் அசத்தலான நடிப்பபை கொடுத்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். முழுப்படத்தின் கதையும் தன் தோள் மீது சுமந்து நிற்கிறார்.
அப்பாவாக நடித்திருக்கும் சார்லி அவரது மனைவியாக வரும் நிரோஷா , முதலாளியாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், மெடிக்கல் ரெப்பாக வரும் ராஜ்குமார் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
கம்பவுண்டராக நடித்திருக்கும் லொள்ளு சபா மாறன் தனது பாணியில் பேசி காமெடியில் அசத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் : என் ஆர் ரகுநாதன், சித்தார்த்தன் விபின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னை இசை படத்திற்கு பலமாக உள்ளது. கே ஏ சக்திவேல் ஒளிப்பதிவு கதைக்கு பக்க பலமாக இருக்கிறது.
உண்மை சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாகியிருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் ஜீவா இத்திரைப்படத்தில் கொரோனா காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்ககளை வைத்து கதையை நகர்த்தி சென்றிருக்கிறார். குடும்ப உறவு, பெண்கள் பாதுகாப்பு, ஆகியவற்றை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் “லாக் டவுன்” – பெண்களுக்கான விழிப்புணர்வு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன்
இசை : என் ஆர் ரகுநாதன், சித்தார்த்தன் விபின்
இயக்கம் : ஏ ஆர் ஜீவா
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S2 மீடியா )