Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி, மகேஷ் மஞ்சரேக்கர், பிரியதர்ஷினி இந்தல்கர், சித்தார்த் ஜாதவ், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காந்தி டாக்ஸ்’.
மும்பையில் வறுமையில் வாடும் விஜய்சேதுபதி அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். அவருடைய எதிர் வீட்டில் வசிக்கும் அதிதி ராவ் ஹைதாரியை காதலிக்கிறார். வேலையில்லாததால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வலி இல்லாமல் கஷ்டப்படுகிறார்.
வேலைக்காக நேர்காணலுக்கு சென்றால் மேலாளர் மற்றவரிடத்தில் லஞ்சத்தை வாங்கி கொண்டு வேலை கொடுக்க மறுக்கிறார். மறுபுறம் பணக்காரரான அரவிந்த் சுவாமிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது.
அவரது குடும்பத்தினரும் எதிர்பாராத விதமாக இறந்து விடுகின்றனர். அரசாங்கம் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்கிறது. இதனையடுத்து விஜய்சேதுபதி பணத்திற்காக அரவிந்த் சாமி வீட்டிற்கு திருட செல்கிறார்.
இறுதியில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி வீட்டில் இருந்து பணத்தை திருடினாரா ? இல்லையா? அரவிந்த் சாமி இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வெளியே வந்தாரா ? இல்லையா? என்பதே ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் மீதிக்கதை.
வறுமையில் வாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்சேதுபதி, இயல்பான நடிப்பின் மூலம கவனம் பெறுகிறார். அம்மா மீது காட்டும் அக்கறை , காதலிடம் காட்டும் கனிவு , திருடுவதிலும் ஒரு நேர்மை என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார்.குறிப்பாக பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து உணவை திருடுவது ரசிக்க முடிகிறது.
தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமி எதிர்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். பார்வையாலே படம் முழுவதும் பேசியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அதிதி ராவ், காதல், பாசம், அக்கறை என அனைத்திலும் அசத்தலான நடிப்பை வழங்கி ஆச்சர்யப் பட வைக்கிறார். திருடனாக நடித்திருக்கும் சித்தார்த் ஜாதவ், கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பின்ணணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறது.
காந்தி நோட்டு , லஞ்சம், ஊழல் அகியவற்றை மைய கருவாக கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இத்திரைப்படத்தை சமூக அக்கறை கொண்டு எடுத்திருக்கிறார்.படத்தில் வசனம் இல்லை என்றாலும் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘காந்தி டாக்ஸ்’ – நோட்டில் சிரிக்கும் காந்தி
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி, மகேஷ் மஞ்சரேக்கர், பிரியதர்ஷினி இந்தல்கர், சித்தார்த் ஜாதவ், பகவதி பெருமாள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
இயக்கம் : கிஷோர் பாண்டுரங் பெலேகர்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)