மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பட நிறுவனம் சார்பில் எம்.எஸ்.மூர்த்தி தயாரிப்பி மற்றும் இயக்கத்தில் ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, சபரி, ரோஹிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம்புலி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ்,எஸ்.சினேகா குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா பி.எல்.தேனப்பன்,சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ் ,அம்பானி சங்கர்,முல்லை, ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு)
அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி காரில் செல்லும் நபரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க அவரை கண்ணுக்கு தெரியாத ஆன்மா ஒன்று அவரை தடுத்து நிறுத்துகிறது. நாயகி ரச்சிதா மகாலட்சுமி – சபரி தம்பதி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள்.
அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஸ்வேதாவுக்கும், ரச்சிதாவுக்கும் நட்பாக பழகி வருகிறார்கள். அதே சமயம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.மூர்த்தி இரவு நேரங்களில் அதே நபரை மீண்டும் கொலை செய்ய நினைக்க அவரை அதே ஆன்மா தடுத்து நிறுத்துகிறது.
இந்நிலையில் பணத்திற்காக ரச்சிதாவை கொலை செய்ய அவரது கணவர் பல்வேறு திட்டங்கள் போட, அதை ஆன்மா ஒன்று தடுத்து நிறுத்துகிறது. இதே சமயம் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களையும் தடுத்து நிறுத்துகிறது.
இதற்கிடையே, திடீரென்று இரவு நேரத்தில் ஸ்வேதாவை அவரது கணவர் கொலை செய்வதை உணரும் ரச்சிதா அவரை குடியிருப்புவாசிகள் உதவியோடு காப்பாற்ற முயற்சிக்கும் போது, ஸ்வேதா ஏற்கனவே இறந்த விட்டார் என்பதும், 99 எண் வீட்டில் யாரும் என்பது தெரிய வருகிறது.
இறுதியில் 99 குடியிருப்பில் வசித்த ஸ்வேதா யார்?, ஸ்வேதா ரக்ஷிதாவை காப்பாற்ற காரணம் என்ன? குடியிருப்பின் சங்க தலைவர் மூர்த்தி கொலை செய்ய நினைக்கும் நபர் யார் ? என்பதே ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி அழகான சிரிப்புடன் இயல்பான நடிப்பபை வெளிப்படுத்தியிருக்கிறார். கணவன் மீது காட்டும் பாசம், அனைவரிடம் காட்டும் அன்பு , ஆவி உடம்பில் புகுந்ததும் காட்டும் ஆக்ரோஷம் என அனைத்திலும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா, புத்த மதத்தை பின்பற்றுபவராக மனிதர்கள்,பறவைகள், விலங்குகள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
அறிமுக நாயகர்களாக நடித்திருக்கும் சபரி மற்றும் ரோகிந்த் இருவரும் கொடூர குணம் கொண்ட கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பபை கொடுத்திருக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி பாசக்கார அப்பாவாக வாழ்ந்திருக்கிறார்.
சாம்ஸ், முல்லை, கோதண்டம், சிங்கம்புலி ஆகியோரது காமெடி வழக்கம் போல சொல்வதற்கு ஒன்றுமில்லை பவன் கிருஷ்ணா, சிறப்பு தோற்றத்தில் வரும் கே.ஆர்.விஜயா, பி.எல்.தேனப்பன் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.மூர்த்தி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு துணை நிற்கிறது. சேவிலோ ராஜா, ஒளிப்பதிவு பிரமாண்டமாக உள்ளது.
அடுக்குமாடி புதிதாக குடியேறும் தம்பதிகள் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.மூர்த்தி இத்திரைப்படத்தில் அப்பா – மகள் பாசம் , கணவன் – மனைவி உறவு, பறவைகள் , விலங்குகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் கூறி இருக்கிறார்.
மொத்தத்தில் ’99/66′ (தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு) – அன்பு வழியில்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : ரக்சிதா மகாலட்சுமி, ஸ்வேதா, சபரி, ரோஹிந்த், பவன் கிருஷ்ணா, சிங்கம்புலி,
இசை : எம்.எஸ்.மூர்த்தி
இயக்கம் : எம்.எஸ்.மூர்த்தி
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்