மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ராஜசேகர் தயாரிப்பில் இயக்குநர் கேந்திரன் வி இயக்கத்தில் விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், இந்துமதி, பால சரவணன், மதுசூதனன், தீபா சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’வடம்’.
ஊர் பெரிய மனிதர் நரேன் அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி வருகிறார். இவரை போலவே அவரது மகன் நாயகன் விமலும் இருக்கிறார். கருணை இல்லாமல் அடிமாட்டுக்கு அனுப்பப்படும் மாடுகளைத் தனது கோசாலையில் வைத்துப் பராமரித்து வருகிறார்கள்.
இப்படி .அடிமாட்டுக்கு அனுப்பப்பட்ட உடல் குறைபாடுள்ள கன்று குட்டியை, கோசாலையில் விடாமல் தனது வீட்டில் வைத்து பராமரிக்கும் விமல், அதற்கு பயிற்சியளித்து மஞ்சுவிரட்டு போட்டிக்கான காளையாக மாற்றுகிறார். ஊரில் நடக்கும் எல்லா போட்டியிலும் இதே காளை வெற்றி பெறுகிறது.
இந்நிலையில் ஒரு விபத்தில் விமலின் காளை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வர செய்யயாத குற்றத்திற்காக விமலும் ஜாமினில் வெளியே வருகிறார். அப்போது அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்கிறது. மறுபக்கம், விமலின் வீட்டில் பணியாற்றிய ஒருவர் அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்.
இதே சமயம் விமலுக்கு நாயகி சனஷ்கா ஸ்ரீ அறிமுகம் கிடைக்க இருவருவரும் காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகி மூலம் விமல் உயிருக்கு ஆபத்து வருகிறது . இறுதியில் நாயகன் விமலை நாயகி சனஷ்கா ஸ்ரீ கொலை செய்ய நினைக்க காரணம் என்ன? விமல் – நாயகி சனஷ்கா ஸ்ரீ இருவருக்கும் திருமணம் நடந்ததா ? இல்லையா ? சிகிச்சை பெற்று வரும் காளை மீண்டும் போட்டியில் கலந்து கொண்டதா ? இல்லையா? என்பதே ’வடம்’ படத்தின் மீதிக்கதை.
வெற்றிவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் கிராமத்து நாயகனாக வீரம் கொண்ட காளையாக வளம் வருகிறார். காலை மாடுகளிடம் காட்டும் பாசம், அவைகளுக்கு கொடுக்கும் பயிற்சி, காதல், சோகம், சண்டை என அனைத்திலும் அதிரடி காட்டியிருக்கிறார்.
அறிமுக நாயகியாக நடித்திருக்கும் சனஷ்கா ஸ்ரீ அழகான இருப்பதோடு அழகான சிரிப்பாள் கிராமத்து பெண்ணாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக இடைவேளை காட்சியில் மிரட்டுகிறார்.
நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்று இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். காமெடி வேடங்களில் நடித்த முனீஷ்காந்த் வித்யாசமான வில்லனாக வருகிறார்.
விமலின் தந்தையாக நடித்திருக்கும் நரேன், விமலின் அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி, அத்தையாக நடித்திருக்கும் தீபா சங்கர், உறவினராக நடித்திருக்கும் பால சரவணன், மதுசூதனன் ராவ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக உள்ளனர்.
இசையமைப்பாளர் டி.இமான் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு உளள்து. பிரசன்னா எஸ்.குமார், ஒளிப்பதிவு அழகாகவும் பிரமாண்டமாகவும் உளள்து.
மஞ்சுவிரட்டு போட்டியை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கும் இயக்குநர் கேந்திரன் வி இத்திரைப்படத்தில் குடுமபம், காலை மாடுகள், போட்டிகள் , கௌரவம் , சூழ்ச்சி , பகை ஆகியவற்றை கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். அனைத்து உயிர்களிடத்த்திலும் அணைப்பு காட்ட வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’வடம்’ – சீறும் காளை
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : விமல், நட்டி நடராஜ்,சனஷ்காஸ்ரீ, முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன்
இசை : டி.இமான்
இயக்கம் : கேந்திரன் வி
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் (S 2 Media)