ஆர் ரமேஷ் பாபு, ஜெகன் பாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் மறைந்த சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் யோகி பாபு லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா ராமகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கெணத்த காணோம்’.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் மக்கள் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறர்கள் . நாயகன் யோகி பாபு கோவில் பூசாரியாகவும் சிற்பங்கள் செய்பவராக இருக்கிறார். ஊரில் மழை பெய்யாததால் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இதனால், மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
தண்ணீர் பிரச்சினையால் நாயகி லவ்லின் சந்திரசேகரை அவரது அப்பா யோகிபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். இந்நிலையில் ஊர் தலைவர் மக்களுடன் சென்று கலெக்டரிடம் தண்ணீர் வேண்டி மனு கொடுக்கிறார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இதையடுத்து ஊர் மக்கள் சேர்ந்து நிலத்தில் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒருவரை அழைத்து வருகிறார்கள்.
வந்தவர் யோகிபாபு இடததில் தண்ணீர் வருவதாக கண்டுபிடித்து கிணறு தோண்டுகின்றனர். அந்த கிணறில் டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. இதையடுத்து அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் தொல்லியல் துறை அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அந்த ஊர் முழுவதிலும் தங்களது ஆய்வுகளை விரிவுப்படுத்த திட்டமிடுகிறது.
இந்நிலையில் அந்த இடத்தை பார்ப்பதற்கு அமைச்சர் வர இருக்கும் நிலையில் டைனோசர் எலும்புக்கூடு காணாமல் போகிறது இதனையடுத்து யோகிபாபு உள்ளிட்ட ஊர் மக்களை போலீஸ் கைது செய்கிறார்கள்.
இறுதியில் காணாமல் போன எலும்புக்கூடு கிடைத்ததா ? இல்லையா? ஊருக்கு குடிநீர் கிடைத்ததா ? இல்லையா? யோகிபாபு – லவ்லின் இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ‘கெணத்த காணோம்’ படத்தின் மீதிக்கதை.
கோவில் பூசாரியாக நடித்திருக்கும் யோகி பாபு, தனது கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மண்ணுக்காகவும் மக்களுக்காவும் போராடும் நிஜ போராளியாக வாழ்ந்திருக்கிறார். சில இடங்ககளில் சிரிக்கவும் பல இடங்களில் வியக்க வைத்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், கிராமத்து பெண் போல இல்லாமல் ஆன் போல புல்லட்டில் வலம் வருகிறார். படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்.
தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன் இருவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், யோகி பாபுவின் அக்காவாக நடித்திருக்கும் நடிகை, ஊர் தலைவராக நடித்திருக்கும் நடிகர் ஊர் மக்கள் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதையோடு பயணிக்கும் வகையில் இருக்கிறது. தியாகராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
தண்ணீர் பிரச்சனையை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் மறைந்த சுரேஷ் சங்கைய்யா இத்திரைப்படத்தில்
தண்ணீர் பிரச்சனையை மட்டும் பேசாமல் ஒற்றுமை , உரிமை ஆகிய முக்கிய பிரச்சனைகளை பற்றி பேசியிருக்கிறார்கள். அனைவரும் சிரிக்கவும், சிந்திக்கவும் வகையில் படத்தை கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘கெணத்த காணோம்’ – மக்கள் உரிமை
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : யோகி பாபு லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா ராமகிருஷ்ணன்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
இயக்கம் : சுரேஷ் சங்கைய்யா
மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்