தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். விரைவில் இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…., ஜி.கே.எம். தமிழ்குமரன் பேசியதாவது..,
“பரிமளா அண்ட் கோ” பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வருகை தந்துள்ள அனைத்து கலைஞர்களையும் எங்களின் சார்பாக அன்புடன் வரவேற்கிறேன். இந்த படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்த படத்தின் முழு பொறுப்பையும் நாங்கள் பாண்டிராஜ் சாரிடம் நம்பிக்கையுடன் ஒப்படைத்தோம். இந்த படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம் அவர்தான். அவர் உழைப்பு, அர்ப்பணிப்பு உண்மையிலேயே அபாரமானது. சமீபத்தில் பின்னணி பணிகளை பார்த்தபோது, “எப்போது படம் எடுத்தீர்கள்?” என்று பலரும் கேட்கும்படி ஆச்சரியப்படும்படி அவ்வளவு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளார்.
இந்த மாதிரி உழைக்கும் இயக்குநரை பார்ப்பதே கடினம். இந்த படத்தில் பணியாற்றிய முழு குழுவும், ஒரு குடும்பம் போல இணைந்து உழைத்திருக்கிறது. அதனால் இந்த படம் மிகவும் அழகான படைப்பாக உருவாகியுள்ளது.
இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
தொழில் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு : Lyca Productions, Tamilkumaran Productions Pvt Ltd, Pasanga Productions
கதை, திரைக்கதை, இயக்கம் : பாண்டிராஜ்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ISC
இசை : Foxn
எடிட்டர் : பிரதீப் E. ராகவ்
கலை இயக்குனர் : T. ராமலிங்கம்
ஸ்டண்ட் : கலாய் கிங்ஸன்
நடன அமைப்பு : சாண்டி, பாபா பாஸ்கர்
மியூசிக் சூப்பர்வைசர் : சந்தோஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் : பூர்ணிமா ராமசாமி
ஆடை : K. நடராஜ்
ஒலிப்பதிவு : M.R. ராஜாகிருஷ்ணன்
சவுண்ட் எஃபெக்ட்ஸ் : ஷ்ரேயஸ் பத், அருண் பிரசாத்
VFX தயாரிப்பு : B.R. வெங்கடேஷ்
DI : Knack Studios
கலரிஸ்ட் : பிரசாத் சோமசேகர்
விளம்பர வடிவமைப்பு : ADFX Studio
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
தயாரிப்பு மேற்பார்வை : ராமதாஸ் & விஜய் C
சப்டைட்டில்ஸ் : ரேக்ஸ்


