நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எட்டு முறை அகாடமி விருது வென்ற விஎஃப்எக்ஸ் நிறுவனமான DNEG இணைந்து, யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படம், உலகம் முழுவதும் 2026 தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை உலகளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்சன்ஸ் விநியோகம் செய்கிறது.
30 ஜூலை 2026: நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’ திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ டிரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரெய்லர், இன்று (ஜூலை 30, 2026) அதிகாலை இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ பற்றி:
தயாரிப்பாளரும், இயக்குநருமான நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்: பகுதி 1’, உலகின் மிகப் பழமையான மற்றும் காலத்தால் அழியாத மகாகாவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும், இரண்டு பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான திரைப்படம்.
படைப்பின் கடவுளான பிரம்மா, காத்தருளும் கடவுளான விஷ்ணு, அழிவின் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் மூவுலகையும் ஆட்சி செய்து வருகின்றனர். தேவலோகம், பூலோகம் உள்ளிட்ட உலகங்கள் குழப்பத்தை எட்டும் வேளையில், தர்மத்தை நிலைநிறுத்த விஷ்ணு, மனித அவதாரமாக பூமியில் பிறக்கிறார். இந்த முறை அவர் இராமராக (ரன்பீர் கபூர்) அவதரிக்கிறார்.
அவருக்கு எதிராக நிற்பவர், மும்மூர்த்திகளின் வரங்களைப் பெற்ற, அளவற்ற ஞானமும் அசைக்க முடியாத வலிமையும் கொண்ட, அழிக்க முடியாத அசுர மன்னன் இராவணன் (யஷ்). அகங்காரமும் பழிவாங்கும் உணர்வும் நிரம்பிய அவரது சக்தி, பிரபஞ்சத்தையே சிதைக்கக் கூடியது.
இராவணனை எதிர்கொள்ள விதிக்கப்பட்டவன் என்பதையும், தனது உண்மையான தெய்வீக நோக்கத்தையும் அறியாத இராமர், தர்மத்தின் உருவாகவும் அயோத்தி மக்களால் மிகவும் நேசிக்கப்படும் இளவரசராகவும் வாழ்கிறார். தனது அன்பு மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் விசுவாசமான தம்பி லட்சுமணன் (ரவி துபே) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக விதிவசத்தால் அவரது வாழ்வு வனவாசத்திற்குத் தள்ளுகிறது. அதுவே இறுதியில் உலகின் விதியை நிர்ணயிக்கும் இருவரின் மோதலுக்குக் காரணமாகிறது.
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இந்திய உணர்வுகளையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் அவரது கதை சொல்லும் பாணி, ‘தங்கல்’ போன்ற திரைப்படங்கள் மூலம் சீனா உள்ளிட்ட உலக சந்தைகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
இந்தப் படத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்த இந்தியத் திரையுலகின் சிறந்த கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்அருண் கோவில், தனது மறக்க முடியாத ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார்.
மேலும், ஷோபனா கைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
முதன்மை கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் பகவான் ஸ்ரீ ராமராக நடித்துள்ளார். தலைமுறைகள் கடந்து இந்தியாவிலும் உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களால் போற்றப்படும் தர்மத்தின் உருவமாக அவர் திரையில் தோன்றுகிறார்.
சீதா தேவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கருணை, தைரியம் மற்றும் உயர்ந்த பண்புகளின் அடையாளமாக மதிக்கப்படும் சீதையின் கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் கொடுத்துள்ளார்.
ராக்கிங் ஸ்டார் யஷ், தனது மான்ஸ்டர் மைம்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பாளராகவும் இந்தப் படத்திற்கு உள்ளார். உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மறக்க முடியாத எதிரி கதாபாத்திரங்களில் ஒருவரான இராவணனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் திரைக்கதையை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் எழுதியுள்ளார். மேலும், இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட உலகின் மிகப்பெரிய கூட்டணியாக, ஆஸ்கர் விருது பெற்ற இசை மேதைகள் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இந்தப் படைப்பின் மூலம், இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்கள், உலகப் புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, மனிதகுலத்தின் மிகப் பழமையான மகாகாவியங்களில் ஒன்றை இதுவரை இல்லாத அளவிலான பிரம்மாண்டம், நம்பகத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவின் நோக்கமாகும்.
தயாரிப்பாளரும் ‘ராமாயணம்’ படத்தின் படைப்பாற்றல் வடிவமைப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணம் என்பது நமது மிகச் சிறந்த இதிகாசங்களில் ஒன்று மட்டுமல்ல, அது நமது வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். நமது பண்பாடு, விழாக்கள், வாழ்க்கை மதிப்புகள் ஆகியவற்றை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயிரோட்டமிக்க காவியமாகவும் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி திருவிழாக்கள் இருளை ஒளி வெல்வதும், அதர்மத்தை தர்மம் வெல்வதும் என்ற ராமாயணத்தின் நிலையான செய்தியை நமக்கு நினைவூட்டுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பிறகும், கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வையும் சிந்தனையையும் தொடர்ந்து வழிநடத்தும் கதைகள் உலகில் மிகவும் அரிது. ராமாயணம் அத்தகைய மகத்தான காவியம்.
உலக திரைப்படத் துறையில் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்ட அனுபவத்தில், இந்தியாவின் மகத்தான கதைகள் உலகின் மிகப்பெரிய திரைகளில் சொல்லப்பட வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் எனக்கெப்போதும் இருந்தது. இன்று, அந்தக் கனவை நனவாக்குவதற்குத் தேவையான கலைஞர்கள், தொழில்நுட்பம், கைவினைத் திறன் மற்றும் ஒருங்கிணைந்த படைப்பாற்றல் நம்மிடம் உள்ளது.
இந்தியாவின் மகத்தான கலாச்சார பாரம்பரியத்தை அதன் உண்மைத்தன்மையுடனும், பிரம்மாண்டத்துடனும், உலகத் தரமான சினிமா தரத்துடனும் உலக மக்களிடம் கொண்டு செல்லும் தருணம் இது.
இது ஒரு திரைப்படத்தின் தொடக்கம் மட்டுமல்ல. இந்தியாவின் பண்பாட்டு செழுமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இந்தியாவில் இந்தக் கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இப்போது அதை உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொள்வது எங்களின் பெருமையும் பொறுப்பும் ஆகும்” என்றார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணம் உலகின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இருப்பதற்குக் காரணம் அதன் பிரம்மாண்டம் மட்டுமல்ல. அது எடுத்துரைக்கும் காலத்தை வென்ற மனித மதிப்புகள்தான்.
ஒரு திரைப்பட இயக்குநராக, இந்தக் கதையை உலகளாவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், அது ஏற்கனவே உலகளாவிய கதையாகவே உள்ளது. என் பொறுப்பு, அதை முழுமையான நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் மிகுந்த மரியாதையுடன் திரையில் கொண்டு வருவதே!
திரைக்கதை, நடிகர்களின் நடிப்பு, கலை இயக்கம், இசை, விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் ஒவ்வொரு காட்சியிலும் எடுக்கப்பட்ட அனைத்தும் ஒரே எண்ணத்தால் வழிநடத்தப்பட்டன! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்த மகத்தான பாரம்பரியத்தை அதற்குரிய கண்ணியத்துடனும் மரியாதையுடனும் போற்ற வேண்டும் என்பதே அந்த எண்ணம். அதே சமயம், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் தொழில்நுட்பங்களுடன் அதை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் நாங்கள் இலக்காகக் கொண்டோம்.
உலகின் தலைசிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கதை சொல்லிகளுடன் இணைந்து இந்தக் கனவை நனவாக்கியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன்.
ரசிகர்கள் இந்த திரைப்படத்தில் வெறும் பிரம்மாண்டமான காட்சிகளை மட்டுமல்ல, ராமாயணத்தின் உணர்வுகளையும், மனிதநேயத்தையும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதை உயிருடன் வைத்திருக்கும் அதன் ஆன்மாவையும் திரையில் கண்டு மகிழ்வார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
DNEG பற்றி:
DNEG என்பது திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் ஆழமான உள்ளடக்கங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) மற்றும் அனிமேஷன் நிறுவனமாகும். வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் அலுவலகங்கள் மற்றும் ஸ்டுடியோக்களை கொண்டுள்ளது. சுமார் 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட DNEG, 2011 முதல் ‘சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்’ பிரிவில் 8 அகாடமி விருதுகளை வென்றுள்ளது. மேலும், தனது உயர்தரமான படைப்புகளுக்காக பல BAFTA, பிரைம்டைம் எம்மி மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளையும் பெற்றுள்ளது.
தி ஆடிஸி (ஜூலை 2026), மோட்டார் சிட்டி (ஜூலை 2026), கோயோட் vs அக்மே (ஆகஸ்ட் 2026), ’டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (ஆகஸ்ட் 2026), கிளாரா அண்ட் த சன் (அக்டோபர் 2026), ஸ்ட்ரீட் ஃபைட்டர் (அக்டோபர் 2026), தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர் – சீசன் 3 (நவம்பர் 2026), தி கேட் இன் தி ஹேட் (நவம்பர் 2026), ராமாயணம்: பாகம் 1 (நவம்பர் 2026), தி ஆங்கிரி பேர்ட்ஸ் மூவி 3 (டிசம்பர் 2026), அபோவ் தி பிலோ (டிசம்பர் 2026), அனிமல் பிரண்ட்ஸ் (ஜனவரி 2027), பேட் ஃபேரிஸ் (மே 2027), பிளேட் ரன்னர் 2099, அலோன் அட் டான், எஸ்ஏஎஸ்: ரோக் ஹீரோஸ் சீசன் 3, ஆன் தி லைன், ரோட் ஹவுஸ் 2, ஸ்னூபி அன்லீஷ்ட், பிளட் ஆன் ஸ்னோ, திஸ் சிட்டி இஸ் அவர்ஸ் சீசன் 2, பிளாக் பேலஸ், குண்டம் மற்றும் தி ஆடிஸி ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளது


