சிவகங்கை மாவட்டம் கரிசங்குளத்தில் வாழும் வயதான தம்பதி கங்கை அமரன் மற்றும் ரோஜா. குழந்தை இல்லாத இவர்கள், தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளைச் செல்லப் பெயர் வைத்துச் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாசத்தோடு பராமரித்து வருகின்றனர்.
அந்நேரத்தில், அமைச்சர் டி.சிவாவின் ஆதரவோடு அரசியல்வாதி ஆடுகளம் நரேன் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். அதற்கு அந்த ஊர் காவல் ஆய்வாளர் போஸ் வெங்கட்டும் உடந்தையாக இருக்கிறார். ஒரு நாள் இரவில், கங்கை அமரன் தன் மகளாக வளர்த்த ‘மீனாட்சி’ என்ற பெண் ஆடு, யுகேந்திரனின் மணல் லாரியில் அடிபட்டு இறக்கிறது.
அதிர்ச்சியடைந்த கங்கை அமரன் காவல் நிலையம் செல்ல, போஸ் வெங்கட் புகாரைப் பெற மறுத்து அவரை அடித்து அவமானப்படுத்துகிறார். இதனால் ஆத்திரமடைந்த கங்கை அமரன், மணல் கொள்ளை பற்றி கிராம நிர்வாக அலுவலர் (VAO) அர்ச்சனாவுக்குத் தகவல் தருகிறார். துணிச்சலாகச் செயல்படும் VAO அர்ச்சனா, மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்படுகிறார்.
இக்கொலையை நேரில் பார்த்த சாட்சியான கங்கை அமரன், நீதிமன்றத்தில் நீதிபதி ஜார்ஜ் மரியன் முன்னிலையில் ஆஜராகிறார். கொலை வழக்கை விளக்குவதோடு, தன் ஆடு கொல்லப்பட்டது, காவல் அதிகாரியால் தனக்கு நடந்த அவமானம் மற்றும் தன் உயிருக்கு இருக்கும் ஆபத்து குறித்துக் கண்ணீர்மல்க முறையிடுகிறார். நிலைமையைப் புரிந்துகொண்ட நீதிபதி, வழக்கு முடியும் வரை கங்கை அமரனுக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப் போலீஸ் கான்ஸ்டபிள் தர்ஷன் கணேசனை நியமிக்கிறார்.
வழக்கை முடக்க ஆடுகளம் நரேனும் யுகேந்திரனும் கங்கை அமரனைக் கொல்லச் சதி செய்கின்றனர். அத்துடன், பாதுகாப்பிற்கு இருக்கும் கான்ஸ்டபிள் தர்ஷன் கணேசனை மிரட்டி அவரை விட்டு விலகுமாறு எச்சரிக்கின்றனர். எதிரிகளின் மிரட்டலுக்கு தர்ஷன் பயந்தாரா? என்பதே ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில்: ‘லெனின் பாண்டியன்’ – மனிதம்
மதிப்பீடு : 3.5 / 5
நடிகர்கள் : கங்கை அமரன்,ரோஜா,தர்ஷன் கணேசன்,ஸ்ரித்தா ராவ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆடுகளம் நரேன், யுகேந்திரன்
இயக்கம் 😀 D பாலச்சந்திரன்
இசை :இளையராஜா
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
