1980–1995 காலக்கட்டத்தில் மதுரை மாவட்டத்தின் பின்னணியில் கதை தொடங்குகிறது. சாதி வெறியும் ஆணாதிக்கமும் நிறைந்த சூழலில், ‘விசில்’ வீரய்யா (முத்துக்குமார்) என்பவரின் ஆதிக்கக் குடும்பத்தில் சுப்பு (சனந்த்) வளர்கிறான். பள்ளிக்காலம் முதலே சுப்புவும் கார்த்தியும் (ரிஷிகாந்த்) நெருங்கிய நண்பர்கள்; எந்தப் பிரச்சனையானாலும் அடிதடியில் இறங்கும் தைரியமான இளைஞர்கள்.
ஒரு கட்டத்தில் பிரியும் நண்பர்கள், பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். இதற்கிடையே சுப்புவின் அண்ணனான சௌந்தர்ராஜா, மலையாளப் பெண்ணான டோரதியை (கீர்த்தி சுரேஷ்) மனைவியாக வீட்டிற்கு அழைத்து வருகிறார். அண்ணன் மனைவியான டோரதியிடம் சுப்பு அன்பாகப் பழகி, வீட்டு வேலைகளுக்கு உதவியாக இருக்கிறான்.
திடீரென ஒரு நாள், முத்துக்குமாரும் சௌந்தர்ராஜாவும் இணைந்து டோரதியை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என போலீசை நம்ப வைக்கின்றனர். டோரதியின் மரணத்தால் மனமுடையும் சுப்பு, ஆணாதிக்கக் குடும்பத்தினரின் பிடியிலிருந்து விலகி, புடவை கட்டுதல், வளையல்-பொட்டு அணிதலுடன் ஒரு திருநங்கையாக (LGBT) தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டு வீட்டை விட்டு ஓடுகிறான்.
தன் மகனின் இந்த மாற்றத்தால் குடும்ப மானம் பறிபோனதாகக் கருதும் முத்துக்குமார், சுப்புவைக் கொலை செய்யத் திட்டமிட்டு, அந்தப் பொறுப்பை சுப்புவின் உயிர்த்தோழனான கார்த்தியிடம் ஒப்படைக்கிறார். இறுதியில் கார்த்தி தன் நண்பனை கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மொத்தத்தில் ‘டோரதி’ – துணிச்சலான முற்போக்கு படைப்பு
மதிப்பீடு : 4 / 5
நடிகர்கள்: சனந்த் , ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ்,சௌந்தர்ராஜா, முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், கஜராஜ்
இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்
இசை: இசைஞானி இளையராஜா
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா
