யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr.சத்யா முரளி கிருஷ்ணன் இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில் தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, அர்ஜை, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க் ராகுல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கருப்பு பல்சர்’ .
மதுரையில் வசிக்கும் வில்லன் அர்ஜெய் தன்னிடம் இருக்கும் பல்சர் பைக் மற்றும் அடியாள் ஒருவரை மன்சூர் அலிகானிடம் கொடுத்து பார்த்துக் கொள்ள சொல்கிறார். மறுபக்கம் சென்னையில் வசிக்கும் நாயகன் தினேஷ் வாட்டர் பியூரிஃபையர் கம்பெனி நடத்தி வருகிறார்.
கதாநாயகி ரேஷ்மாவிற்கு மேட்ரிமோனி மூலம் தினேஷ் அறிமுகமாகிறார். இருவருக்கும் காதலிக்க தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு நாயகி ரேஷ்மா கூறுகிறார். XL வண்டியை வைத்துள்ள தினேஷ், தன்னிடம் கருப்பு பல்சர் இருப்பதாக கதாநாயகியிடம் பொய் சொல்கிறார். இந்த பொய்யை உண்மையாக்க மன்சூர் அலிகானிடம் இருந்து கருப்பு பல்சர் வண்டியை வாங்குகிறார்.
ஆனால் அந்த பைக் வாங்கியதிலிருந்து தினேசுக்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. பல்சர் பைக் மோதி வில்லன் அடியாள் இறந்து விடுகிறான், ஒரு கட்டத்தில் அந்த பைக்கில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றின் ஆவி புகுந்திருப்பது தினேசுக்கு தெரியவர அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் கருப்பு பல்சருக்குள் புகுந்திருக்கும் ஆவி யார்? தினேஷ் – ரேஷ்மா இருவருக்கும் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ‘கருப்பு பல்சர்’ படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் தினேஷ் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இரண்டிலும் வேறுபட்ட நடிப்பபை கொடுத்த்திருக்கிறார். சென்னையில் வசிப்பவர் காதல்,காமெடி, செண்டிமெண்ட் என இருக்க மதுரையில் இருப்பவர் காளை போட்டி , வீரம் , மனைவி பாசம் என்று இரண்டு கதாபாத்திரத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ், மற்றும் மதுநிகா இருவரும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் அர்ஜை வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மன்சூர் அலிகான் வில்லனாக இல்லாமல் காமெடியில் கலக்கியிருக்கிறார். போலீஸ் உயரதிகாரியாக வரும் சரவணா சுப்பையா , பிராங்க் ராகுல் என படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் இன்பா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு உள்ளது.
காளைமாடு மற்றும் மாடு பிடி வீரனை மையக்கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இத்திரைப்படத்தை முதல்பாதி பல்சர் பைக், காமெடி என்று கதை நகர இரண்டாம் பாதி காளை , வீரம் , பழிவாங்குவது என்று கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘கருப்பு பல்சர்’ – வீர விளையாட்டு
மதிப்பீடு : 3/5
நடிகர்கள் : னேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மதுநிகா, மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, கலையரசன் கண்ணுசாமி , பிராங்க் ராகுல்
இசை : இன்பா
இயக்கம் : முரளி கிரஷ். எஸ்
மக்கள் தொடர்பு : பி.தியாகராஜன், ஆர்.மணி மதன்