விஜய் மேரி யுனிவர்சல் மீடியா சார்பில் விஜயமேரி தயாரிப்பில், இயக்குநர் விஜயகுமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி , சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘க்ராணி’ .
ஊருக்கு வெளியே உள்ள வாழைத்தோப்பில் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு இதயம் காணாமல் போகிறது. இதனையடுத்து இந்த வழக்கை சப் – இன்ஸ்பெக்டர் திலீபன் விசாரிக்கிறார். அவருக்கு உதவியாக போலீஸ் ஏட்டு சிங்கம் புலி இருக்கிறார்.
இந்நிலையில் இதே ஊருக்கு லண்டனில் இருந்து வரும் ஆனந்த் நாக் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அரண்மனை வீட்டில் குடும்பத்துடன் வசிக்க வருகிறார். அப்போது அடையாளம் தெரியாத பாட்டி ஒருவர் மயங்கி வீட்டு வாசலில் விழுகிறார்.
அப்போது அவருக்கு உதவி செய்து வீட்டிலேயே தங்க வைக்கிறார்கள். மறுபுறம் இந்த வழக்கை திலீபன் மற்றும் சிங்கம்புலி விசாரிக்க பல திடுக்கிடும் அமானுஷ்யம் இருப்பது தெரிய வருகிறது.
இதே சமயம் அந்த வீட்டில் இருக்கும் பாட்டி ஆனந்த் நாக் மற்றும் அவரது மனைவியை கொலை செய்து விடுகிறார். இதை நேரில் பார்க்கும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே போக பார்க்கிறார்கள். ஆனால் அவர்களால் வெளியே போக முடியாத அளவிற்கு பாட்டி அந்த வீட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறார்.
இதே நேரம் அந்த அரண்மனைக்கு திலீபன் மற்றும் சிங்கம்புலி வருகிறார்கள். இறுதியில் திலீபன் மற்றும் சிங்கம்புலி பாட்டியிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றினார்களா?இல்லையா? அந்த பாட்டி யார் ? குழந்தைகளை கொலை செய்ய கரணம் என்ன ? என்பதே ‘க்ராணி’ படத்தின் மீதிக்கதை.
பாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசி வயதான தோற்றத்தில் மிரட்டிடி இருக்கிறார். அவர் போட்டிருக்கும் மேக்கப் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு கச்சிதமாக இருக்கிறது. பார்வையாலே மிரட்டியிருக்கிறார்.
சப் – இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் திலீபன் இயல்பான நடிப்பபை கொடுத்திருக்கிறார். குறிப்பாக குழந்தைகளை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது. போலீஸ் எட்டாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி படத்தின் இறுதிக்காட்சியில் அனைவரின் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார்.
ஆனந்த் நாக் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் , ஊர் பெரிய மனிதராக வரும் கஜராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பார் செல்லையா பாண்டியன் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலமாக உள்ளது.
குழந்தைகள் கொலை மற்றும் இதயம் திருட்டு ஆகியவற்றை மைய கருவாக வைத்து ஒரு ஹாரர் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமரன் இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் கதையை நகர்த்தி சென்றிருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘க்ராணி’ – மிரட்டும் பாட்டி
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : வடிவுக்கரசி , சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக்
இசை : செல்லையா பாண்டியன்
இயக்கம் : விஜயகுமரன்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM)