திருப்பதி பிரதர்ஸ் – சித்தார்த் ராய் கபூர், என்.சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில் இயக்குனர் என்.லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’அஞ்சான்’
மும்பையில் ரவுடியாக இருக்கும் சந்துரு (வித் யூத் ஜாம் வால்) இவரது உயிர் நண்பர் ராஜு பாய் (சூர்யா) சந்துருவிற்காக எதையும் செய்யக் கூடியவர். இந்நிலையில் இவர்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாத கடத்தல் மன்னன் மனோஜ் பாஜ்பாயி சந்துருவை கொலை செய்து விடுகிறார்.
இதே போல ராஜு பாயையும் சுட்டு வீழ்த்துகிறான். இதில் ராஜு பாய் எப்படியோ உயிர் பிழைத்து பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மும்பைக்கு வந்து தன் நண்பனை கொன்றவர்களை பழிவாங்க நினைக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் காதலி சமந்தாவை எதிரிகள் கடத்து சென்றுவிடுகிறார்கள்.
இறுதியில் சூர்யா நண்பனை கொன்றவளை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? சமந்தாவை சூர்யா எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினாரா? இல்லையா என்பதே ’அஞ்சான்’ படத்தின் மீதிக்கதை.
ராஜு பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா நண்பனுக்காக எதையும் செய்யும் கத்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், நடனம், ஆக்ஷன், என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சமந்தா அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார். கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.
நண்பவராக வரும் வித்யுத் ஜம்வால், வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயி என படத்தில் மற்ற வேடங்ககளில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு இனிமை பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
11 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அஞ்சான் படம் சற்று மாறுபட்ட விமர்சனங்களை பெற்றது தற்போது ரீ ரிலீஸ் ஆகியிருக்கும் அஞ்சான் படத்தில் முன்பிருந்த காட்சிகளில் 36 நிமிடங்கள் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காமெடி என்ற பெயரில் சூரி நடித்த கடுப்பான காட்சிகள் வெட்டி எறியப்பட்டிருக்கின்றன.
இயக்குனர் லிங்குசாமி அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் ‘அஞ்சான்’ தற்போது சில மாற்றங்களுடன் மீண்டும் ரசிகர்களை கவர வந்திருக்கிறது.
மொத்தத்தில் ’அஞ்சான்’ – அதிரடி
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : சூர்யா, சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாயி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : என்.லிங்குசாமி
மக்கள் தொடர்பு : ஜான்சன்