ரேடியண்ட் இண்டர்நேஷ்னல் பிலிம், அதுல் மூவி இந்தியா – பிரதிக் டி.ஜகத்பார், அதுல் எம்.போசமையா ஆகியோர் தயாரிப்பில் இயக்குனர் ஜெ.பி இயக்கத்தில் டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன், கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பிபி180’
பென்னேரி உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக தன்யா ரவிச்சந்திரன் வேலை பார்க்கிறார். ஒரு நாள் இரவு சாலை விபத்தில் இறந்த பெண்ணின் உடல் இந்த அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இறந்த பெண் முக்கிய புள்ளியான பாக்யராஜ் மகள் என தெரிய வருகிறது. இறந்த பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய தன்யா செல்ல இருக்க நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என்று பலரிடம் இருந்து உடற்கூறு ஆய்வு செய்யக் கூடாது என்று மிரட்டல் வருகிறது.
இதை பற்றி கவலைப்படாத தன்யா நேர்மையான முறையில் உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கிறார். இதனால், அப்பகுதியில் உள்ள பிரபல ரவுடி டேனியல் பாலாஜி தன்யாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலையிடும் சென்னை காவல்துறை ஆணையர், தமிழ். டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் கோபம் அடையும் டேனியல் பாலாஜி, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி தன்யா ரவிச்சந்திரனை கொலை செய்ய நினைக்கிறார்.
இறுதியில் நாயகி தன்யா டேனியல் பாலாஜியிடம் இருந்து உயிர் பிழைத்தாரா? இல்லையா? என்பதே ‘பிபி180’ படத்தின் மீதிக்கதை.
தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் நேர்மையான மருத்துவராக துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கிறார். டேனியல் பாலாஜியிடம் நேருக்கு நேர் சவால்விடும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.
அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, மிரட்டலான ரவுடியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். சண்டை காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பாக இறுதிக்காட்சியில் இவரது நடிப்பு கவனிக்க முடிகிறது.
முக்கிய புள்ளியாக வரும் இயக்குநர் கே.பாக்யராஜ் அழுத்தமான கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
முன்னாள் எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் அருள்தாஸ், காவல்துறை ஆணையராக நடித்திருக்கும் தமிழ், சமூக ஆர்வலராக நடித்திருக்கும் ஜாக் அருணாச்சலம், நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, சகோதரராக நடித்திருக்கும் ரங்கா, தோழியாக நடித்திருக்கும் நயனா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ராமலிங்கம் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுத்தால் பலம் சேர்க்கிறது.
அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் மற்றும் ரவுடி இருவருக்கிடையே நடக்கும் மோதலை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெ.பி இத்திரைப்படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை யாரும் யூகிக்க முடியாத வகையில் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.
மொத்தத்தில் ‘பிபி180’ – உயிர் காப்பவர்
மதிப்பீடு : 3.5/5
நடிகர்கள் : டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன், கே.பாக்யராஜ், அருள்தாஸ், தமிழ்
இசை : ஜிப்ரான்
இயக்கம் : ஜெ.பி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்