மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கத்தில் விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா. சிவகிருஷ்ணா. இலக்கியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’மகாசேனா’.
குரங்கணி மலைப்பகுதியில் மலை மேல் உள்ள மக்களுக்கும் அடிவாரத்தில் உள்ள மக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பகைமை நிலவுகிறது. மலை மேல் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான நாயகன் விமல் மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் மகள் இலக்கியா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். சேனா என்ற யானையை வளர்க்கிறார்.
யாழி கிராமத்தில் சித்ரா பௌர்ணமி அன்று கோவில் திருவிழா நடத்த முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியினர் தலைவி மஹிமா குப்தாவுடன் சேர்ந்து கொண்டு திருட திட்டமிடுகிறார்.
இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் விமல் செல்ல சென்ற இடத்தில் யாளிஷ்வரன் சிலை கடத்தப்படுவது குறித்து தகவல் கிடைக்கிறது.
இறுதியில் எதிரியிடம் இருந்து யாளிஷ்வரன் சிலை விமல் காப்பாற்றினாரா? இல்லையா? விமல் – மஹிமா குப்தா இருவரும் மோதிக் கொள்ள காரணம் என்ன ? என்பதே
’மகாசேனா’ படத்தின் மீதிக்கதை.
பழங்குடியினராக நடித்திருக்கும் விமல் இயல்பான நடிப்பால் கவர்கிறார். நடனம், சண்டை, பாசம் என அனைத்திலும் அதிரடி காட்டியியிருக்கிறார். பழங்குடியினர் பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சிருஷ்டி டாங்கே, வீரத்தமிழச்சியாக நடித்து அசத்தியிருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை குறைவாக உள்ளது. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் . உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. மனாஸ் பாபு.டி.ஆர் ஒளிப்பதிவு காடு, மலை, கிராமம் என அனைத்தையும் அழகாக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
யாளிஷ்வரன் சிலை கடத்த நினைக்கும் வில்லன் அதை காப்பாற்ற நினைக்கும் நாயகன் இருவருக்கும் இடையே நடக்கும் மோதலை மைய கருவாக வைத்து திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் சிலை கடத்தல் மற்றும் அதன் பின்னணி ஆகியவற்றுடன் கல்லூரி மாணவர்களின் மலை ஏறுதல் என மூன்று விதமான கிளைக்கதைகளை இணைத்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ’மகாசேனா’ – யானை பலம்
மொத்தத்தில் 3/5
நடிகர்கள் : விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா. சிவகிருஷ்ணா. இலக்கியா
இசை : ஏ.பிரவீன் குமார்- பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R
ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு.டி.ஆர்
இயக்கம் : தினேஷ் கலைச்செல்வன்
மக்கள் தொடர்பு : ரேகா